நாளை குடியரசு தினம்-தீவிர பாதுகாப்பு
டெல்லி:நாட்டின் 58வது குடியரசு தின விழா நாளை கொண்டாடப்படுவதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்புபன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லி முழுவதும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டெல்லியில் போலீஸார் தவிர துணை ராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
200க்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்கள் 24 மணி நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளன. அதிரடிப்படையினரும் ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முக்கிய மற்றும் பதட்டமான பகுதிகளில் அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பெண் தற்கொலைப்படைத் தீவிரவாதிகள் ஊடுறுவி தாக்குதல் நடத்தலாம் என்று சந்தேகிக்கப்படுவதால் அதை முறியடிக்கதேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
குடியரசுத் தினம் தவிர தியாகிகள் தினம், ரஷ்ய அதிபர் புடின் வருகை என தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சிகள்இருப்பதால் ஜனவரி 30ம் தேதி வரை பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும் என டெல்லி போலீஸ்வட்டாரம் தெரிவிக்கிறது.
குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் விஜய் செளக் முதல் செங்கோட்டை வரையிலான பகுதியில் தீவிரவாதத்தடுப்புப் படைகள், சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் தேசிய பாதுகாப்புப்படையினர், ராணுவம், உளவுப் பிரிவு ஆகியவையும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
வான் வழியாக தீவிரவாதத் தாக்குதல் நடைபெறாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளும்மேற்கொள்ளப்பட்டுள்ளன. குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் பகுதியில், விமானங்கள் பறக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மீறி பறக்கும் விமானங்களை சுட்டு வீழ்த்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களிலும் கூடுதல்பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் திரையரங்கங்கள், வணிக வளாகங்கள், பொதுமக்கள்அதிகம் கூடும் பகுதிகளிலும் தீவிர பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உஷார் நிலையில் சென்னை:
சென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு 12,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குடியரசு தினவிழா நடக்கும் இடம், அணிவகுப்பு நடக்கும் இடம், மெரீனா கடற்கரை காமராஜர் சாலை, முக்கியகட்டடங்கள் ஆகியவற்றுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
குடியரசு தின விழா அணிவகுப்பு நடக்கும்போது சென்னை கடற்கரை பகுதிகளில் ரோந்து பணிதீவிரப்படுத்தப்படும். மெரீனா கடற்பகுதியில் கடற்படையினர் படகில் ரோந்து பணியில் ஈடுபடுவர்.
விழா நடக்குமிடத்தை உயரமான கட்டடங்களில் இருந்து போலீசார் பைனாகுலர் மூலம் கண்காணிக்கவுள்ளனர்.விழாவுக்கு வரும் பார்வையாளர்களும் ரகசிய கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவர்.
விழாவில் கலந்து கொள்ள வரும் பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்கள் தீவிர சோதனைக்கு பின்னரே விழாநடக்கும் பகுதிக்குள் அனுமதிக்கப்படுவர். துறைமுகம், தலைமை செயலகம், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள்,வெளிநாட்டு தூதரகங்கள், அனைத்து மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தேசிய தலைவர்களின் சிலைகள்ஆகியவற்றிற்கும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை நக>ல் உள்ள அனைத்து விடுதிகளிலும் போலீஸார் அதிரடிசோதனை நடத்தி வருகின்றனர். அங்கு சந்தேககப்படும்படியாக யாரேனும் இருக்கிறார்களா என்பது குறித்துவிசா>த்து வருகின்றனர்.
கடந்த இரு நாட்களாக வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இரவு ரோந்தும்தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காவல் ஆணையர் லத்திகா சரண், கூடுதல் ஆணையர் ஜாங்கிட் தலைமையில் 12,000போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications