சேலம், வேலூர் ஜல்லிக்கட்டில் 2 பேர் பலி
சேலம்:சேலம் மாவட்டம் தம்மம்பட்டி மற்றும் வேலூர் மாவட்டம் கீழ் வல்லம் ஆகிய இடங்களில் நடந்த ஜல்லிக்கட்டுநிகழ்ச்சிகளில் 2 பேர் மாடு முட்டி பலியாயினர்.
சேலம் அருகே உள்ள தம்மம்பட்டி கிராமத்தில், குடியரசு தின விழாவையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டுநிகழ்ச்சி நடப்பது வழக்கம்.
அதன்படி நடு வீதியில் ஜல்லிக்கட்டு நடந்தது. இதைப் பார்க்க ஆயிரக்கணக்கானவர்கள் கூடியிருந்தனர்.
ஆனால், எந்தவித பாதுகாப்பு வசதிகளும் செய்யாமல் மொத்தமாக ஆட்கள் திரண்டிருக்க அவர்களுக்கு நடுவேகாளைகள் திறந்து விடப்பட்டன. வீதிகளில் ஆட்கள் அலை கடலென திரண்டிருக்க வீடுகளின் மொட்டைமாடிகளிலும் ஆயிரக்கணக்கானோர் கூடி நின்று ஜல்லிக்கட்டை ரசித்தனர்.
300க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. சீறிப் பாய்ந்து வந்த காளைகளை பல இளைஞர்கள்துணிச்சலுடன் அடக்க முயன்றனர். சில காளைகள் யாருக்கும் அடங்காமல் கூட்டத்தினரை தாண்டி ஓடி ஆட்டம்காட்டின.
போட்டி முடியும் நேரத்தில் ஒரு காளை வாடி வாசலை விட்டு வெளியேறிய அடுத்த நிமிடமே கூட்டத்துக்குள்பாய்ந்தது. இளைஞர் கூட்டத்தில் ஏறி மிதித்துப் பாய்ந்த அந்தக் காளையிடம் சிக்கி மணிவேல் என்ற இளைஞர்சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது கழுத்தில் மாடு குத்தியது.
கேரளாவில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்த மணிவேல், விடுமுறையில் ஊருக்கு வந்தவராம். நண்பர்களுடன்ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்ப்பதற்காக வந்திருந்தவர் காளை முட்டி இறந்தார். மேலும் 200க்கும் மேற்பட்டார்காயமடைந்தனர்.
இதேபோல வேலூர் மாவட்டம் கீழ் வல்லம் கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில், மனோகரன் என்பவர்இறந்தார். மாடுகள் ஓடி வருவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது அவர் மாடு முட்டி இறந்தார்.
இவர் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் கிளார்க் ஆக வேலை பார்த்து வந்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications