சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது: கருணாநிதி
திருச்சி:அதிமுக ஆட்சியுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு மிகவும் சீராகவேஉள்ளது என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
முதல்வர் கருணாநிதி நேற்று இரவு மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் திருச்சி சென்றார். இன்று காலைஅவருக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
வரவேற்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில், வருகிற பிப்ரவரி 5ம் தேதிவெளியாகவுள்ள காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு தமிழகத்திற்கு நன்மை தரக் கூடியதாக அமையும், மதுரை,கோவை, திருச்சியைத் தொடர்ந்து நெல்லையிலும் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்.
சென்னைக்கு புல்லட் ரயில் விடுவது குறித்து மத்திய அரசுடன் பேச்சு நடத்தி வருகிறோம்.
சேது சமுத்திரத் திட்டத்தை ஆதரிப்பதாக முதலில் கூறியவர்தான் ஜெயலலிதா. இப்போது அவர்தான் கடுமையாகஎதிர்க்கிறார். அதுபோலவே ராமர் பாலம் தொடர்பாகவும் அவர்பேசத் தொடங்கியுள்ளார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீராகவே உள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தையும், தற்போதையதிமுக ஆட்சியையும் ஒப்பிட்டுப் பார்க்கையில், குற்றங்களை கண்டுபிடிப்பதிலும், குற்றச் செயல்களைத்தடுப்பதிலும் நல்ல முன்னேற்றம் உள்ளது.
கடந்த ஆட்சிக்காலத்தை விட இந்த ஆட்சியில், 7 சதவீத அளவுக்கு குற்றச் செயல்கள் குறைந்துள்ளன.கொள்ளையர்களைப் பிடிக்க காவல்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்றார் கருணாநிதி.
அமைச்சரவையை விரிவாக்கும் திட்டம் ஒன்றும் இப்போது இல்லை. தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கும் பங்கு தர வேண்டும் என்பதுகுறித்த கேள்விக்கு தமிழக காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் வீரப்ப மொய்லி கூறுகையில், அதுகுறித்து தமிழக முதல்வரும், அகில இந்தியகாங்கிரஸ் தலைவரும்தான் முடிவெடுப்பார்கள் எனக் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியினர் பதவி கேட்டு வலியுறுத்தவில்லை. பத்திரிக்கையாளர்கள்தான் அதுபோல பிரஷர் கொடுக்கின்றனர்.
தமிழக அரசாணை தமிழில்தான் வெளியிடப்படுகிறது. எனக்கு வரும் கோப்புகள் தமிழில்தான் வருகின்றன. நானும் தமிழில்தான் கையெழுத்துப்போடுகிறேன். ஆளுநருக்கு தமிழ் தெரியாது என்பதால் அவருக்கு ஆங்கிலத்தில் கோப்புகள் அனுப்பப்படுகின்றன.
அப்துல் கலாமை மீண்டும் குடியரசுத் தலைவர் பதவிக்கு நிறுத்துவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications