ரணில் கட்சி டமால்: 18 அதிருப்தி எம்.பிக்கள்அமைச்சர்களாக பதவியேற்பு - சமரவீரா நீக்கம்!

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சி உடைந்தது. 18 அதிருப்திஎம்.பிக்கள் இன்று அமைச்சர்களாகப் பதவியேற்றனர். வெளியுறவு அமைச்சர் பதவியிலிருந்து மங்கள சமரவீரா நீக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் சுதந்திராக் கட்சியின் தலைமையில் அங்கு கூட்டணி ஆட்சி உள்ளது. இந்தக் கட்சிக்கு சிங்கள கட்சிகள் உள்ளிட்ட சில கட்சிகள்ஆதரவு கொடுத்து வருகின்றன.

சமீபத்தில் சில கட்சிகள் தாங்கள் அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றன. இதையடுத்து ஆட்சியைக் காப்பாற்ற ரணில் கட்சியுடன் அதிபர்ராஜபக்ஷே பல்வேறு உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டார்.

இந்த நிலையில் ரணில் கட்சியில் தற்போது பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. ரணில் கட்சியைச் சேர்ந்த முக்கியமான 18 எம்.பிக்கள்அக்கட்சியிலிருந்து விலகி சுதந்திரா கட்சியில் இன்று இணைந்தனர்.

ரணில் கட்சியின் முக்கியத் தலைவரான கரு ஜெயசூர்யா தலைமையில் 18 எம்.பிக்களும் கட்சி தாவியுள்ளனர். கட்சி தாவியவர்களில் முன்னாள்அமைச்சர் ஜி.எல்.பெரீஸ் முக்கியமானவர். ரணில் ஆட்சியின்போது விடுதலைப் புலிகளுடன் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் அரசுக்குழுவுக்கு பெரீஸ்தான் தலைமை தாங்கினார் என்பது நினைவிருக்கலாம்.

ரணில் கட்சி உடைந்ததன் மூலம் ஆளுங்கட்சியுடன் அக்கட்சி செய்து கொண்ட ஒப்பந்தம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. அதிபர்ராஜபக்ஷேவின் சதியால்தான் ரணில் கட்சி உடைந்துள்ளதாக இலங்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.

அமைச்சர்களாகப் பதவியேற்பு:

கட்சி தாவிய 18 எம்.பிக்களும் பின்னர் அதிபர் ராஜபக்ஷேவை அவரது அதிகாரப்பூர்வ இல்லமான ரெய்ன்ட்ரீ மாளிகையில் சந்தித்தனர்.இதையடுத்து அவர்களுக்கு அதிபர் ராஜபக்ஷே அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் இலங்கை அமைச்சரவை 51அமைச்சர்களாகக் கொண்டதாக விரிவடைந்தது.

2005ம் ஆண்டு அதிபராக ராஜபக்ஷே பதவியேற்ற பிறகு அமைச்சரவை முதல் முறையாக இன்றுதான் விரிவுபடுத்தப்பட்டது என்பதுகுறிப்பிடத்தக்கது.

அமைச்சரவை விரிவாக்கத்தின்போது, இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ராப் ஹக்கீம், துறைமுகத் துறை அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார். இந்தக் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் ஐந்து எம்.பிக்கள் உள்ளனர்.

புதிய வெளியுறவு அமைச்சர்:

அமைச்சரவையில் முக்கிய மாற்றமாக வெளியுறவுத் துறை அமைச்சர் பதவியை வகித்து வந்த மங்கள சமரவீரா அப்பொறுப்பிலிருந்துவிலக்கப்பட்டுள்ளார்.

புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக ரஹிதா பொகல்லகாமா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அமைதிப் பேச்சுக்களுக்கான அமைதி செயலகத்தின்செய்தித் தொடர்பாளராக இதுவரை இருந்து வந்தார்.

ரணில் கட்சியிலிருந்து விலகிய 18 எம்.பிக்கள் குழுவின் தலைவரான கரு ஜெயசூர்யா, பொது விவகாரம் மற்றும் உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்லார்.

ஜி.எல். பெரீஸ், ஏற்றுமதி மற்றும் சர்வதேச வர்த்தக் துறை அமைச்சராகியுள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 எம்.பிக்கள் உள்ளனர். இவர்களில் ராஜபக்ஷே அரசுக்கு 135 எம்.பிக்கள் உள்ளனர். இவர்களில்சிங்களக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியின் 38 எம்.பிக்களும் அடக்கம். ரணில் கட்சி எம்.பிக்களை ஆட்சியில் சேர்த்தால் ஆதரவைவாபஸ் பெறுவோம் என ஜனதா விமுக்தி பெரமுனா ஏற்கனவே எச்சரித்துள்ளது நினைவிருக்கலாம்.

தற்போது 18 எம்.பிக்கள் சுதந்திராக் கட்சியில் சேர்ந்துள்ளதால், ராஜபக்ஷே அரசுக்கு மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளதுகுறிப்பிடத்தக்கது. அதேசமயம், ஜனதா விமுக்தி பெரமுனா தனது ஆதரவை விலக்கிக் கொண்டாலும் கூட ராஜபக்ஷே அரசுக்கு பெரும்பான்மைபலம் இருக்கும்.

ராஜபக்ஷே அரசுக்கு ஏற்கனவே தமிழர் கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மக்கள் முன்னணி, ஜாதிக ஹேல உருமயா ஆகிய கட்சிகள்ஆதரவு அளித்து வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+