புலிகளுக்கு இரும்பு குண்டு சப்ளை செய்தவர் கைது
மும்பை:விடுதலைப் புலிகளுக்கு கண்ணி வெடி தயாரிக்கப் பயன்படும் இரும்பு குண்டுகளை மும்பையிலிருந்து வாங்கிஅனுப்பி வைத்த தமிழரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சமீபத்தில் சென்னை மற்றும் தூத்துக்குடியில் கியூ பிரிவு போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் கண்ணிவெடிகள் தயாரிக்கப் பயன்படும் இரும்பு குண்டுகள் அடங்கிய 100 கூடைகள் பிடிபட்டன. இதுதொடர்பாக ஐந்துஇலங்கைத் தமிழர்கள் உள்பட 9 பேரை போலீஸார் கைது செய்தனர்.
விடுதலைப் புலிகளுக்கு அனுப்புவதற்காக இந்த இரும்பு குண்டுகள் கடத்தப்பட்டதாக போலீஸ் விசாரணையில்தெரிய வந்தது. இந்தக் குண்டுகள் அனைத்தும் மும்பையிலிருந்து அனுப்பப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த நபரைப் பிடிக்க போலீஸ் தனிப்படை மும்பை விரைந்தது. தற்போது அவரை போலீஸார்கைது செய்துள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த அவரது பெயர் மிராஜ் சாஹேப் இஸ்மாயில். கடந்த 4 வருடங்களாகமும்பையில் வசித்து வருகிறார்.
கோரேகானில் வீடு எடுத்துத் தங்கியுள்ள அவர் இரவு நேரங்களில் சைக்கிளில் சென்று தேனீர் விற்பனை செய்துவருகிறார். இவர்தான் இரும்புக் குண்டுகளை வாங்கி 3 பிரிவாக தமிழகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
மொத்தம் 6 டன் இரும்புக் குண்டுகளை இவர் வாங்கி அனுப்பி வைத்துள்ளார். தலா 2 டன் இரும்புக்குண்டுகளாக மொத்தம் 3 முறை அனுப்பியுள்ளார். அதில் ஒரு பிரிவு குண்டுகளைத்தான் சென்னை மற்றும்தூத்துக்குடியில் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இஸ்மாயிலிடம் மும்பை போலீஸார் தற்போது விசாரித்து வருகின்றனர். அவரை மும்பை நீதிமன்றத்தில்ஆஜர்படுத்திய பின்னர் தமிழகத்திற்கு அழைத்து வர தமிழக போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications