உறவுக்கு மறுத்த மனைவியைக் கொன்ற கணவர்!
சேலம்: கல்யாணமாகி 56 நாட்களாகியும், தன்னை அருகில் நெருங்க விட மனைவி மறுத்ததால் கோபமடைந்த கணவன்,அவரை தலையணையால் அமுக்கிக் கொலை செய்தார்.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள கே.கே.நகரைச் சேர்ந்தவர் முத்துச்சாமி. இவருக்கும் பத்மாவதிஎன்பவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கல்யாணம் நடந்தது.
இந்த நிலையில் கடந்த 23ம் தேதி தனது வீட்டின் கிணற்றில் மர்மமான முறையில் பத்மாவதி இறந்து கிடந்தார்.இதுகுறித்து மகுடஞ்சாவடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில்திடுக்கிடும் தகவல் வெளியானது.
பத்மாவதியைக் கணவர் முத்துச்சாமிதான் கொலை செய்தார் எனத் தெரிய வந்தது. இதுகுறித்து முத்துச்சாமிபோலீஸில் அளித்துள்ள வாக்குமூலம்:
கல்யாணம் ஆன நாள் முதலே என்னை எனது மனைவி அருகில் நெருங்க விடவில்லை. நானும் எவ்வளவோமுயற்சித்தும் அருகில் வர விடாமல் தடுத்தார். இதனால் நான் மன வேதனை அடைந்தேன்.
இந்த நிலையில் எனது குடும்பத்துடன் நான் திருப்பதிக்குச் சென்றிருந்தேன். வீடு திரும்பியபோது, பத்மாவதிவீட்டில் உடை மாற்றிக் கொண்டிருந்தார். அறைக்குள் நான் நுழைந்தபோது, பத்மாவதியின் அக்காள் கணவர்அங்கே அமர்ந்திருந்தார்.
இதைப் பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். அவர்களுக்குள் கள்ளத் தொடர்பு இருக்கலாம் என சந்தேகித்தேன்.இதுகுறித்து நான் பத்மாவதியிடம் கேட்டேபாது எங்களுக்குள் சண்டை ஏற்பட்டது.
சண்டை அத்தோடு முடிந்தது. அன்று இரவு நான் பத்மாவதியை உறவுக்கு அழைத்தேன். ஆனால் அவர் என்னைநெருங்க விடவில்லை. கல்யாணமாகி 56 நாட்களாகியும் என்னை அருகே வர விடாமல் தடுக்கும் பத்மாவதியின்செயலை நினைத்து கோபமடைந்தேன், ஆத்திரத்தில் அவரை கண்மூடித்தனமாக அடித்தேன். பின்னர் அவரைகட்டிலில் தள்ளி தலையணையைை எடுத்து முகத்தில் அழுத்தினேன். இதில் பத்மாவதி மூச்சுத் திணறி இறந்தார்.
பின்னர் எனது அண்ணன் கோவிந்தராஜிடம் இதுகுறித்துக் கூறினேன். இதையடுத்து உடலை கிணற்றில் போட்டுவிடலாம். யாராவது கேட்டால் தற்கொலை செய்து விட்டார் எனக் கூறி விடலாம் என அவர் ஆலோசனைகூறினார். அதன்படி கிணற்றில் போட்டு விட்டோம் என்று கூறியுள்ளார் முத்துச்சாமி.
கொலை செய்ததாக முத்துச்சாமியையும், அதை போலீஸுக்குத் தெரிவிக்காமல், மறைத்த குற்றத்திற்காககோவிந்தராஜையும் போலீஸார் கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications