பிறந்தது தமிழ் இன மான மீட்பு இயக்கம்!
சென்னை:பாமக நிறுவனர் ராமதாஸ் தொடங்கியுள்ள தமிழ் இன மான மீட்பு இயக்கம் நேறறு தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழ் இனமான மீட்பு இயக்கம் என்ற புதிய அமைப்பை ராமதாஸ் தொடங்கியுள்ளார். இந்த இயக்கத்தில்மாவட்டத்திற்கு 10 இளைஞர்கள் வீதம் மொத்தம் 300 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு கருப்புச் சட்டை, வெள்ளை பேன்ட் சீருடையாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடமாகஇவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் பழமையான நாகரீக வளர்ச்சி, வரலாறு குறித்துஇந்தப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
பெரியாரின் கொள்கை பரப்பும் சேவகர்களாக இவர்கள் செயல்படவுள்ளனர். அதேசமயம், கடவுள் மறுப்புக்கொள்கையை மட்டும் இவர்கள் பிரசாரம் செய்ய மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்களின்பிரச்சினைகளுக்காகவும் இந்த அமைப்பு போராட்டம் நடத்தும்.
இந்த இயக்கத்தின் தொடக்க விழா சென்னை தி.நகரில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்தது. பெரியாரியல்அறிஞர் ஆணைமுத்து, முன்னாள் சபாநாயகர் ராஜாராம், திருவாவடுதுறை ஆதீனம் முத்துக்குமாரசாமிதம்பிரான், முன்னாள் துணைவேந்தர் க.ப.அறவாணன், இரா.செழியன், பாமக தலைவர் ஜி.கே.மணிஉள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்.
கருப்பு உடையில் வந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ராமதாஸ். நிகழ்ச்சியில் ராமதாஸ் பேசுகையில்,இந்த இயக்கத்தில் இடம்பெற்றுள்ள அனைவரும் ஒழுக்க சீலர்களாக இருக்க வேண்டும். அறவழியில்போராட்டங்களை நடத்த வேண்டும். இதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன்.
இன்னும் 3 மாத காலத்திற்குள் தமிழ்தான் தமிழகத்தில் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும். இல்லையென்றால்தமிழ் இன மான மீட்பு இயக்கம் போராட்டம் நடத்தும்.
மத்திய அரசுடன் தற்போது தொடர்பு மொழியாக உள்ளஆங்கிலத்தில் கோப்புகளை அனுப்புகிறோம். அத்துடன்தமிழையும் சேர்த்து அனுப்புங்கள். அரசு உத்தரவுகளை தமிழில் பிறப்பித்து தமிழை ஆட்சி மொழியாகமாற்றுங்கள்.
1ம் வகுப்பு முதல் பிளஸ்டூ வரை தமிழ் தான் படிப்பு மொழியாக இருக்க வேண்டும். ஒரு பாட மொழியாக 6ம்வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஆங்கிலம் இருந்து விட்டுப் போகட்டும். வேறு மொழிகளை கற்கவிரும்புபவர்கள் தனியாக அதை கற்று விட்டுப் போகட்டும்.
நான் படிக்கும்போது 6ம் வகுப்பிலிருந்துதான் ஆங்கிலம் பாட மொழியாக இருந்தது. 11ம் வகுப்பு வரைஆங்கிலத்தை மொழிப்பாடமாகத்தான் படித்தேன். குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூட அப்படித்தான்படித்தார்.
ஆனால் இன்று காளான்கள் போல ஆங்கிலப் பள்ளிகள் பெருகி விட்டன. இது ஏன்? தமிழ் பயிற்று மொழியாகஇல்லாமல் போய் விட்டது? இவ்வளவு நர்சரி பள்ளிகள் எங்கிருந்து முளைத்தன? தமிழகத்தில் பண்பாடு இல்லைஎன்று சிலர் விமர்சிக்கும் அளவுக்கு அவர்களுக்கு எப்படி தைரியம் வந்தது?
இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் இந்த இயக்கம் சார்பில் விடை காணப் போகிறோம். காண்போம் என்றார்ராமதாஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications