நான்கு யு.எஸ். வீரர்கள் ஈராக்கில் கடத்திக் கொலை
பாக்தாத்:ஈராக்கில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 4 பேர் சதாம் ஆதரவாளர்களால் கடத்திச் செல்லப்பட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
ஷியா முஸ்லீம்களின் புனித நகரான கர்பலாவில் இச்சம்பவம் நடந்துள்ளது. கடந்த 20ம் தேதி அங்குள்ள ஈராக்அரசு அலுவலகம் ஒன்றில் அமெரிக்க வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென புகுந்த சதாம்ஆதரவாளர்கள் 4 அமெரிக்க வீரர்களை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர்.
கடத்திச் செல்லப்பட்ட சில மணி நேரத்திலேயே நான்கு பேரையும் சரமாரியாக சுட்டுத் தள்ளினர். நான்குவீரர்களின் கைகளும் பின்னால் கட்டப்பட்டிருந்தன. அவர்களை நிற்க வைத்து சரமாரியாக துப்பாக்கிகளால்சுட்டுத் தள்ளியுள்ளனர்.
அவர்களில் 3 பேர் உடனடியாக இறந்து விட்டனர். ஒருவர் படுகாயமுற்று உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். அவரை மீட்ட ஈராக் போலீஸார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர்வழியிலேயே மரணமடைந்தார்.
வீரர்களை கடத்தியவர்கள் பார்ப்பதற்கு அமெரிக்கர்களைப் போன்ற தோற்றமளித்ததாலும், அமெரிக்க வீரர்கள்அணியும் சீருடையை அணிந்திருந்ததாலும், சரளமான ஆங்கிலத்தில் பேசியதாலும், அவர்களை உள்ளே நுழையஈராக் போலீஸார் அனுமதித்துள்ளனர்.
அமெரிக்க வீரர்களைக் கொன்றவர்கள் சன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது. கர்பலாவுக்குஅருகே உள்ள பாபில் மாகாணத்தில் சதாம் ஆதரவாளர்கள் இன்னும் வலிமையுடன் இயங்கி வருகின்றனர்.அவர்கள்தான் அமெரிக்க வீரர்களை கடத்திக் கொன்றவர்களாக இருக்கக் கூடும் என அமெரிக்க ராணுவம்சந்தேகிக்கிறது.
ஏற்கனவே இதே பகுதியில், அமெரிக்க வீரர்கள் சிலர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டது நினைவிருக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications