மாணவி குளித்ததை படம் பிடித்த இளைஞர்!
சென்னை:நள்ளிரவில் கல்லூரி மாணவி குளித்ததை வீடியோவில் படம் பிடித்த வெளிநாட்டு இளைஞர் பிடிபட்டார்.மாணவி மன்னித்ததால் அவரை போலீஸார் கடுமையாக எச்சரித்து விட்டு விட்டனர்.
சென்னை சூளைமேடு அண்ணா நெடுஞ்சாலை பகுதியில் வசிப்பவர் கமலா (வயது 19). கல்லூரி மாணவியானகமலா, இரவில் நெடு நேரம் படிப்பார். பின்னர் தூங்கப் போகும்போது குளிப்பது வழக்கம்.
சம்பவத்தன்றும் இரவில் படித்து விட்டு நள்ளிரவுக்கு மேல் குளியலறையில் குளித்துள்ளார். அப்போதுகுளியலறை ஜன்னலில் சிவப்பு விளக்கு எரிவதைப் பார்த்து துணுக்குற்றார்.
யாரோ தான் குளிப்பதை வீடியோவில் படம் பிடிப்பதை உணர்ந்து கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து அந்த நபர்தப்பி விட்டார். அடுத்த நாள் காலையில் இதுகுறித்து அவர் போலீஸில் புகார் கொடுத்தார்.
ஜன்னல் வழியாக தான் குளிப்பதை படம் எடுத்த நபர் வெளிநாட்டுக்காரரைப் போல இருந்ததாக அவர்தெ>வித்தார். இதையடுத்து அவரது வீட்டுக்கு அருகே வெளிநாட்டுக்காரர்கள் யாராவது வசிக்கிறார்களா என்றுபோலீஸார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கமலாவின் வீட்டுக்கு அருகே ஒரு கணவன், மனைவி வசிப்பது தெரிய வந்தது. அவர்களில்மனைவி அமெரிக்காவைச் சேர்ந்தவர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்புதான்அவர்கள் குடும்பத்தோடு சென்னைக்கு வந்துள்ளனர்.
இந்த நிலையில் கமலாவின் வீட்டுச் சுற்றுச் சுவரில் இருந்த இரும்பு முள் கம்பி வேலி ஒரு ஆள் செல்லும்அளவுக்கு வளைந்திருந்ததை போலீஸார் பார்த்தனர். அந்தப் பகுதி எங்கே செல்கிறது என்று பார்த்தபோது அதுபக்கத்து வீட்டுக்குச் சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து அமெரிக்க தம்பதிகளின் மகன்களை போலீஸார் துருவித் துருவி விசாரித்தனர். விசாரணையில்அவர்கள்தான் குற்றவாளிகள் என்பது தெரிய வந்தது.
இருவரும் அடிக்கடி பல பெண்களை வீட்டுக்கு அழைத்து வந்து உல்லாசமாக இருப்பார்களாம். மேலும், மதுஅருந்தி விட்டு பெண்களை கூட்டி வருவதும், தெருவில் நடக்கும்போதே அவர்கள் முத்தமிட்டுக் கொள்வதும்சகஜம் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இரு சகோதரர்களில் மூத்தவரான ஆண்ட்ரூஸ் என்பவர், நான் தான் கமலா குளிப்பதை வீடியோவில் படம்பிடித்தேன் என்று போலீஸாரிடம் ஒப்புக் கொண்டார். அவர் பலமுறை கமலாவை குளிக்கும் நிலையில்வீடியோவில் படம் பிடித்துள்ளார்.
முள் கம்பி வேலியிைல் நுழைந்து போகும்போது அவரது முதுகில் கம்பி குத்திக் கிழித்த காயமும் இருந்ததைப்போலீஸார் பார்த்தனர். தெரியாமல் செய்து விட்டதாகவும், இனிமேல் செய்ய மாட்டேன், மன்னித்து விடுங்கள்எனவும் ஆண்ட்ரூஸ் போலீஸாரிடம் கெஞ்சினார்.
கமலாவும், வழக்குப் பதிவு செய்ய வேண்டாம். இதுபோல இனிமேல் நடக்கக் கூடாது, அதற்கேற்ப அவர்களைகடுமையாக கண்டித்து விட்டு விடுங்கள் என போலீஸாரிடம் கூறினார். இதைத் தொடர்ந்து ஆண்ட்ரூஸையும்,அவரது தம்பியையும் கடுமையாக எச்சரித்த போலீஸார், அவர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு விட்டுவிட்டனர்.












Click it and Unblock the Notifications