பித்தலாட்ட விஜயகாந்த்-கருணாநிதி ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

திருச்சி:என்னால் எல்லாம் முடியும், ஆட்சியைக் கொடுத்துப் பாருங்கள் சாதித்துக் காட்டுகிறேன் என்று கூறி மக்களைஏமாற்றும் பித்தலாட்டக்காரர்களை மக்கள் அடையாளம் கண்டு அவர்களை நெஞ்சுரத்தோடு எதிர்க்க வேண்டும்என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

திருச்சி மாநகராட்சி மாமன்ற வளாகத்தில், முன்னாள் நகராட்சித் தலைவர் ரத்தினவேல்தேவரின் சிலையைகருணாநிதி திறந்து வைத்துப் பேசுகையில்,

அப்போது, ஆட்சி மாறி, நம்மிடம் ஆட்சி வந்தபோது, எங்கள் முன் 2,000 கோப்புகள் தேங்கிக் கிடந்தன. அதில்தேவர் சிலைக்கான அனுமதி கோரி வந்த கோப்பும் ஒன்று. அதை கோப்புகளில் தேடிக் கண்டுபிடித்தோம்.உடனடியாக ஆணை பிறப்பிக்கப்பட்டு சிலை திறப்புக்கு அனுமதி தரப்பட்டது.

தேவர் என்றால் தமிழகத்தில் இரண்டு பேர்தான் நினைவுக்கு வருவார்கள். ஒருவர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், இன்னொருவர் ரத்தினவேல் தேவர்.

தேவர், போராட்டக் குணம் படைத்தவர். கல்லூரியில் படித்தபோது சேப்பாக்கத்தில் நடந்த கிரிக்கெட்போட்டியைப் பார்ப்பதற்காக மாணவர்கள் பொய்யான காரணத்தைக் கூறி விட்டுச் சென்றார்கள். ஆனால் தேவர்உண்மையான காரணத்தைக் கூறி கடிதம் கொடுத்தார்.

இதையடுத்து அவருக்கு ஒரு அணா அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் அதை கட்ட தேவர் மறுத்து விட்டார்.இதையடுத்து அவரை கல்லூரியில் அனுமதிக்க மறுத்து விட்டனர். ஆனாலும் விடாத தேவர், பொய்யானகாரணத்தைக் கூறிச் சென்றவர்களை அனுமதிக்கிறீர்கள், எனக்கு மட்டும் அபராதமா என்று கேட்டார். அவரதுவாய்மையைப் பாராட்டி கல்லூரியில் அவரை அனுமதித்தனர்.

நமது நாட்டில் உள்ள கருப்புப் பணத்தை அரசு கைப்பற்றி ஏழை, எளிய மக்களுக்குக் கொடுக்க வேண்டும்.அரசுக்கு வரி செலுத்தாமல், வருமான வரியில் முறைகேடுகள் செய்து, வீட்டில் பதுக்கி வைத்திருக்கும், ஒளித்துவைத்திருக்கும் கருப்பு பணம் 1 லட்சத்து 17 ஆயிரம் கோடி என்கிறார்கள்.

இந்தப் பணத்தை இந்திய அரசு தோண்டி எடுத்து வெளியே கொண்டு வந்தால், இந்தியா சம நிலை பெறும்.மக்கள் தொகையில், நாம் சளைத்தவர்கள் இல்லை. கவாஸ்கர், கங்குலி செஞ்சுரி அடிப்பதைப் போல நாமும்மக்கள் தொகையில் செஞ்சுரி அடித்துள்ளோம். 100 கோடியைத் தாண்டி விட்டோம்.

நான்தான் புத்தன், நான்தான் புனிதன், சர்வரோக சஞ்சீவி, என்னை ஆட்சியில் அமர்த்திப் பாருங்கள், நாட்டையேதிருத்தி விடுவேன், கருப்புப் பணத்தை ஒழிப்பேன் என்று கூறும் பித்தலாட்டக்காரர்கள் நாட்டில்தோன்றியிருக்கிறார்கள்.

இப்படிப் பேசி வருபவர்கள்ை மக்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். அவர்களுக்குப் பாடம் புகட்டதேவரிடம் இருந்த நெஞ்சுரம் மக்களுக்கு வர வேண்டும். போலிகளை அடையாளம் காண வேண்டிய கடமைமக்களுக்களுடையது என்றார் கருணாநிதி.

நிகழ்ச்சியில், போட்டி மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன், மாநில அமைச்சர்கள் கே.என்.நேரு, ஆற்காடுவீராசாமி, செல்வராஜ், மத்திய அமைச்சர் ராசா, திருச்சி மேயர் சாருபாலா தொண்டமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு முதல்வர் கருணாநிதி மதுரை புறப்பட்டுச் சென்றார்.

மதுரையில் நடந்த அம் மாவட்ட திமுக செயலாளர் வேலுசாமியின் மகள் திருமண விழாவில் கருணாநிதிபேசுகையில்,

மதுரையம்பதி எனக்கு புதியதல்ல, நினைவு வைத்துக்கொள்ள கூடிய முத்திரை பதித்த ஊர். 65 ஆண்டுகளுக்குமேலாக பழகிய நண்பர்கள் இங்கு இருக்கிறார்கள். அது எனக்கு குளிர்ச்சியாக உள்ளது. இங்கு பேசியவர்கள்என்னை குடும்பத் தலைவர் எனறனர், இவ்வளவு பெரிய குடும்பத்திற்கு தலைவராக இருப்பது கடினம். ஆனாலும்இருக்கிறேன் என்றால் அது பெரியார், அண்ணா வழிகாட்டுதலால் மட்டுமே. தமிழ்நாட்டில் திமுக போல் ஒருபெரிய குடும்பம் கிடையாது.

சென்னைக்கு அடுத்தப்படியாக மதுரை இருக்கிறது. நகராட்சி தலைவரை மேயராக பெற்ற பெருமை மதுரைக்குஉண்டு. ஒரு பெண்மணியை மேயராக தேர்வு செய்து, பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்ததின் மூலம் திமுகஉரிமையை பகிர்ந்தளிக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

தம்பி அழகிரி வரவேற்றுப் பேசும்போது, என்னை திமுக தலைவர் என்று குறிப்பிட்டார். எனது பெயரைச்சொல்லவும் அவருக்குப் பயம். கலைஞர் என்று சொல்லவும் அவருக்குக் கூச்சம். கூச்சத்தையும், பயத்தையும்கொண்ட இவரைத்தான் நீங்கள் எல்லோரும் அஞ்சா நெஞ்சன் என்று அழைக்கிறீர்கள்.

அவர் அஞ்சா நெஞ்சனா என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவர் கொள்கைகளை விட்டுக் கொடுக்காமல்,யாரிடமும் கெஞ்சா நெஞ்சராக இருப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+