ஆந்திர அரசு நிலத்தில் ஜெ திராட்சை தோட்டம்?
ஹைதராபாத்:ஆந்திர மாநிலம் ஹைதராபாத் அருகே குத்புல்லாபூர் மாவட்டத்தில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதாவின் திராட்சை தோட்டம், அரசு நிலத்தில் அமைந்துள்ளதாக ஆந்திர அரசு கூறியுள்ளது.இதுதொடர்பாக ஜெயலலிதாவுக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது.
ஆந்திராவில் ஜெயலலிதாவுக்கு திராட்சை தோட்டம் உள்ளது. வருடத்துக்கு ஒரு மறை அல்லது இருமுறை இந்தத்தோட்டத்துக்குத் தனது தோழி சசிகலாவுடன் செல்வது ஜெயலலிதாவின் வழக்கம்.
வழக்கமாக ஆங்கிலப் புத்தாண்டுக்கு முன்பாக அவர் அங்கு செல்வார். ஆனால் இந்த ஆண்டு அவர் செல்லாமல்இருந்து வருகிறார். இதற்கு என்ன காரணம் என்பது அதிமுகவினருக்கே தெரியாமல் இருந்து வந்தது. ஆனால்இப்போதுதான் அதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.
இந்தத் திராட்சை தோட்டத்தை காலி செய்ய வேண்டும் என்று கூறி ஜெயலலிதாவுக்கு தோட்டம் உள்ளகுத்புல்லாபூர் மாவட்ட தாசில்தார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். காரணம் இந்த இடம் அரசு நிலமாம். அதைஆக்கிரமித்து ஜெயலலிதா திராட்சை தோட்டம் போட்டுள்ளார் என ஆந்திர அரசு கூறியுள்ளது.
இதுதொடர்பாக தாசில்தார் அனுப்பிய நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாவது: ஹைதராபாத் புறநகர்ப் பகுதியில்உள்ள ஷீராபாத் கிராமத்தில் கடந்த 1968ம் ஆண்டு ஜெயலலிதாவும், அவரது தாயார் சந்தியாவும் 8.10 ஏக்கர்நிலம் வாங்கியுள்ளனர்.
இது சைலு, கே.ராமசாமி, தப்பு போச்சையா ஆகியோருக்கு தலா 3.2 ஏக்கர், 3.15 ஏக்கர், 1.15 ஏக்கர் என ஆந்திரஅரசால் ஒதுக்கப்பட்ட இலவச நிலமாகும். ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளபடி, இந்த நிலங்கள், நிலமற்றஏழைகளுக்காக ஆந்திர அரசால் வழங்கப்பட்டவையாகும்.
இந்த நிலங்களை விற்கவும் முடியாது, வாங்கவும் முடியாது. இதை வாங்கியிருப்பதன் மூலம் இவை ஆக்கிரமிப்புநிலங்கள் என்றாகிறது. இதுகுறித்து 15 நாட்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் சட்டப்படியாகநடவடிக்கை எடுத்து நிலத்தை கைப்பற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், இதற்கு ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். விஜயகாந்த்தைத் திட்டி அவர் சமீபத்தில் விட்டஅறிக்கையில், இந்த நில விவகாரத்தையும் குறிப்பிட்டு ஆந்திர அரசுக்குக் கண்டனம் தெரிவித்திருந்தார். இதுஅரசியல்ரீதியான பழிவாங்கும் நடவடிக்கை என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து ஆந்திர மாநில வருவாய்த்துறை அமைச்சர் தர்ம பிரசாத்ராவ், ஆந்திர முதல்வர் ராஜசேகரரெட்டியை சந்தித்து பேசினார். பின்னர் இந்த விஷயத்தில் சட்டப்படி தொடர்ந்து மேல் நடவடிக்கை எடுப்பதுஎன்று முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து ஆந்திர அரசின் சார்பில் அமைச்சர் தர்ம பிரசாதராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஜெயலலிதாவுக்கு சட்டம் தெரியும். நில ஆக்கிரமிப்புக்கு நடவடிக்கை எடுப்பது அரசியல் பழிவாங்கும் செயல்என்ற குற்றச்சாட்டை அவர் கூறுவது நியாயமல்ல. ஏழைகளுக்காக வழங்கப்பட்ட நிலத்தை மீட்டு மீண்டும்அவர்களுக்கு வழங்க நினைக்கும் ஆந்திர அரசின் முயற்சிக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்று அவர்கூறியுள்ளார்.
இது குறித்து ஆந்திர உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, வழக்கமான சட்டநடைமுறையின்படி இந்த நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனைவழங்கியுள்ளார். நிலத்தை மீட்க மாநில அரசுக்கு உரிமை உள்ளது.
இதை எதிர்த்து வருவாய் கோட்ட அதிகாரியையோ அல்லது நீதிமன்றத்தையோ ஜெயலலிதா அணுகலாம்.ஆனால் அரசு அனுப்பிய நோட்டீசுக்கு அவர் பதில் அனுப்ப வேண்டும். இல்லையென்றால் நிலத்தை திரும்பபெற ஆந்திர அரசு நடவடிக்கை எடுக்கும். ஏற்கனவே ரங்கா ரெட்டி மாவட்டத்தில் மட்டும் இதுபோல 3,000ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது என்றார்.
ஏற்கனவே காஞ்சிபுரம் மாவட்டம் சிறுதாவூர் அருகே அண்ணா ஆட்சிக்காலத்தில் தலித் மக்களுக்குவழங்கப்பட்ட இலவச நிலத்தை ஜெயலலிதாவும், சசிகலாவும் ஆக்கிரமித்துள்ளதாக சர்ச்சை உள்ளது. இந்தநிலையில் ஹைதராபாத் அருகே உள்ள ஜெயலலிதாவின் திராட்சைத் தோட்டமும் ஆக்கிரமிப்பு சர்ச்சையில்சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications