ஒடும் ரயிலில் கொள்ளையர்களை பிடித்த ஜாங்கிட்

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னை உள்ளிட்ட தமிழக நகரங்களை அச்சுறுத்தி வந்த கிரில் கொள்ளையர்களை ஓடும் ரயிலை நிறுத்திப்பிடித்ததாக, தனிப்படைக்குத் தலைமை தாங்கிய சென்னை நகர கூடுதல் ஆணையர் ஜாங்கிட் தெரிவித்தார்.

கொல்கத்தா சென்று 11 கிரில் கொள்ளையர்களையும் வளைத்துப் பிடித்த தனிப்படைக்கு ஜாங்கிட் நேரடித்தலைமை வகித்தார். கொள்ளையர்களைப் பிடித்த கையோடு நேற்று இரவு ஜாங்கிட் கொல்கத்தாவிலிருந்துதிரும்பினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜாங்கிட் அவர்களைப் பிடித்தது குறித்து விளக்கினார்.

ஏற்கனவே தமிழகத்தில் கொலை, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட கொடூரமான பவேரியா கும்பலைப்பிடித்த அனுபவம் எனக்கு இருந்ததால், கிரில் கொள்ளையர்களைப் பிடிக்க எனக்கு அதிக சிரமம் இருக்கவில்லை.

இவர்கள் குறித்து 3 மாதங்களுக்கு முன்பே முக்கியத் துப்பு எங்களுக்குக் கிடைத்து விட்டது. அக்கும்பலில்மொத்தம் 14 பேர் இருந்தனர். அவர்களை கூண்டோடு பிடிக்கத் திட்டமிட்டோம். அவசரப்பட்டால் காரியம்கெட்டு விடும் என்பதால்நிதானமாக வலையை விரித்தோம்.

முதலில் சமீர் என்பவனின் படம் எங்களுக்குக் கிடைத்தது. அவனை வைத்து அக்கும்பலைப் பிடிக்கதிட்டமிட்டோம். கிரில் கொள்ளையர்கள் கொல்கத்தாவிலிருந்து ஹவுரா ரயில் மூலம் சென்னைக்கு வந்து செல்வதுதெரிய வந்தது.

இதையடுத்து ஹவுரா ரயிலை தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வந்தோம். இதற்கு தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தாமஸ் வர்கீஸ் எங்களுக்கு நிறையவே உதவி செய்தார். தினசரி வரும் ரயிலை திடீர் திடீரென நடுவழியில் நிறுத்திசோதனை போடுவோம்.

இதில் 2 முறை ஒரு குற்றவாளியைப் பார்த்தோம். ஆனால் அவனைப் பிடிக்காமல் விட்டு விட்டோம். அவனைப்பிடித்தால் மற்றவர்கள் தப்பி விடுவார்கள் என்பதால் விட்டு விட்டோம். கடந்த சனிக்கிழமை கிரில்கொள்ளையர்கள் 2 பேர்ஹவுரா ரயிலில் வந்தனர்.

அவர்களைப் பிடித்து மொத்தக் கும்பலையும் வளைக்கத் திட்டமிட்டோம். இதையடுத்து அவர்கள் 2 பேரையும்பிடித்தோம். இதைத் தொடர்ந்து மேற்கு வங்க மாநில போலீஸாரின் உதவியுடன் 10 பேரை ஞாயிற்றுக்கிழமைமடக்கினோம். 2 பேர் வங்க தேசத்திற்குள் ஓடித் தப்பி விட்டனர்.

கொள்ளை அடித்த நகைகளை அனைவரும் சமமாக பங்கு போட்டுள்ளனர். அதாவது எடை பார்த்து நகைகளைப்பிரித்துக் கொண்டுள்ளனர். நகைகளை அனைத்தையும் வங்க தேசத்தில்தான் விற்றுள்ளனர்.

குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக கடந்த 3 மாதமாக 300 போலீஸார் கடுமையாக பாடுபட்டனர். இரவு பகல்பாராமல் அனைவரும் பாடுபட்டனர். அதிலும் கடந்த 2 நாட்களாக யாருமே சரியாக சாப்பிடவில்லை. டீமட்டும்தான் குடித்தோம். இதற்காக அனைவருக்கும் நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

கொள்ளையர்கள் பிடிபட்டு விட்டனர். இனிமேல் சென்னை மக்கள் நிம்மதியாக உறங்கலாம் என்றார் ஜாங்கிட்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+