திருநாவுக்கரசருக்கு புது பதவி-மோடிக்கு கட்!
டெல்லி:பாஜக தேசிய செயலாளராக முன்னாள் அமைச்சரும், ராஜ்யசபா எம்.பியுமான திருநாவுக்கரசர்நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
பாஜகவில் நிலவி வரும் கோஷ்டிப் பூசல் மிக பிரபலமானது. இந் நிலையில் தேசிய அளவில் முக்கிய பாஜகநிர்வாகிகள் சிலரை அக் கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் மாற்றியுள்ளார்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வகித்து வந்த பாஜக நாடாளுமன்ற போர்டு உறுப்பினர் பதவிபறிக்கப்பட்டுள்ளது. மோடிக்கும் ராஜ்நாத்துக்கும ஆகாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல ஆபாச சிடி சர்ச்சையில் சிக்கிய ஆர்எஸ்எஸ்சை சேர்ந்த சஞ்சய் ஜோஷி வகித்து வந்த பொதுச்செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. அருண் ஜெட்லியிடமிருந்து செய்தித் தொடர்பாளர் பதவிபறிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசுவுக்கு தேசிய செயலாளர் பதவி தரப்பட்டுள்ளது. இதே பதவியில் மேலும் 8பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தென் மாநிலங்களிலிருந்து திருநாவுக்கரசருக்கு மட்டுமே தேசிய செயலாளர் பதவிவழங்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜக தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்படுவார் என முன்பு எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்அவருக்குப் பதில் இல.கணேசன் தலைவர் ஆனார். இதனால் திருநாவுக்கரசர் ஏமாற்றத்துடன் இருந்தார். இதனால்கட்சி அலுலகத்திற்கே அவர் வருவதை தவிர்த்து வந்தார். அவர் திமுகவில் இணையப் போவதாக செய்திகள்வந்தன.
இந் நிலையில் அவரை சமாதானப்படுத்தும் வகையில் தேசியச் செயலாளர் பதவி கிடைத்துள்ளது.
அருண் ஜெட்லி, முன்னாள் மகாராஷ்டிர முதல்வர் கோபிநாத் முண்டே, அனந்தகுமார் உள்ளிட்ட 7 பேர்கட்சியின் பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
துணைத் தலைவர்களாக யஷ்வந்த் சின்ஹா, சாகிப் சிங் வர்மா, கோயல் ஓறம், சாந்தகுமார், முக்தார் அப்பாஸ்நக்வி, கல்யாண் சிங், கைலாஷ் அகர்வால், கருணா சுக்லா, பாலா சாஹேப் ஆப்தே ஆகியோர்நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொருளாளராக ராம்தாஸ் அத்வாலே நியமிக்கப்பட்டுள்ளார். செய்தித் தொடர்பாளர்களாக ரவிசங்கர் பிரசாத்,பிரகாஷ் ஜாவ்டே, ராஜீவ் பிரதாப் ரூடி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய செயற்குழு உறுப்பினர்களாக மூத்த தலைவர்களான வாஜ்பாய், அத்வானி, ஐஸ்வந்த்ச சிங், முரளிமனோகர் ஜோஷி, வெங்கையா நாயுடு, சுஷ்மா சுவராஜ், வி.கே.மல்ஹோத்ரா, அருண் ஷோரி, பங்காருலட்சுமணன், மேனகா காந்தி, சத்ருகன் சின்ஹா, லலிதா குமாரமங்கலம், தமிழக பாஜக முன்னாள் தலைவர்சி.பி.ராதாகிருஷ்ணன், உள்ளிட்ட 30 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications