அமிர்தானந்தமயி விழாவில் கருணாநிதி
சென்னை:திட்டக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் கருணாநிதி பிப்ரவரி 5ம் தேதி டெல்லி செல்கிறார்.
2007-08ம் ஆண்டுக்கான மத்திய திட்ட ஒதுக்கீடு குறித்து மத்திய திட்டக் குழுவுடன் விவாதிப்பதற்காக 5ம் தேதி முற்பகல் 11.30 மணிக்கு தமிழகஅரசுடன் திட்டக் குழு ஆலோசனை நடத்தவுள்ளது.
இக்கூட்டத்தில் கலந்து கொள்ள கருணாநிதி டெல்லி செல்கிறார். இந்த பேச்சுவார்த்தையின் இறுதியில் தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீடுஅறிவிக்கப்படும்.
இந் நிலையில் நாளை மாலை நாகப்பட்டினத்தில் மாதா அமிர்தானந்தமயி மடம் சார்பில் சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்காக கட்டப்பட்டகுடியிருப்புகள் ஒப்படைக்கும் விழாவில் பங்கேற்கிறார் கருணாநிதி. இவ்விழாவில் அமிர்தானந்த மயியும் கலந்துகொள்கிறார்.
சமீபத்தில் சாய்பாபாவுடன் ஒரே மேடையில் கலந்து கொண்டார் கருணாநிதி. தற்போது இன்னொரு ஆன்மீக வாதியான அமிர்தானந்தமயியுடன் ஒரேமேடையில் ஏறுகிறார் கருணாநிதி.
பிப்ரவரி 2ம் தேதி சென்னையில் நடக்கும் போட்டி மதிமுக பொதுச் செயலாளர் செஞ்சி ராமச்சந்திரனின் மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும்கருணாநிதி கலந்து கொள்கிறார்.
அழகிரி பிறந்த நாள்: கருணாநிதி நேரில் வாழ்த்து
இதற்கிடையே தனது மகன் அழகி>யின் 56வது பிறந்த நாள் விழாவில் கருணாநிதி கலந்து கொண்டு மகனை வாழ்த்தினார். விழாவையொட்டி மதுரைநகரமே குலுங்கிப் போகும் அளவுக்கு அழகிரியின் ஆதரவாளர்கள் அமர்க்களப்படுத்தியிருந்தனர்.
மதுரை மற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த மூத்த திமுக நிர்வாகிகளும் அழகிரிக்கு வாழ்த்து தெரிவித்தனர். திமுகவினர், பெரும் திரளாகஅழகிரியை அவரது வீட்டில் சந்தித்தனர்.
இதில் காவல்துறை அதிகா>கள், அரசு உயர் அதிகாரிகளும் அடக்கம்.
பிறந்த நாளையொட்டி அழகிரியை வாழ்த்தி நகர் முழுவதும் டிஜிட்டல் பேனர்கள் களை கட்டியிருந்தன. வாழ்த்துப் போஸ்டர்களுக்கும்பஞ்சமில்லை. அழகிரி வீடு உள்ள பகுதி திருவிழாக் கோலம் பூண்டு காணப்பட்டது. அழகிரி பிறந்த நாள் ஏற்பாடுகளை தென் மாவட்டங்களைச்சேர்ந்த அமைச்சர்கள் உள்ளிட்டோர் நேரில் இருந்து கவனித்தனர்.
காவிரி குடிநீர்: கருணாநிதி அடிக்கல்
இந் நிலையில் இன்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் காவிரி ஆற்றிலிருந்து நீரைக் கொண்டு வர ரூ. 616 கோடியில் பெரும் திட்டத்திற்குமுதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார்.
திருச்சி, முக்கொம்பு, முத்தரசநல்லூர், கலியக்குறிச்சி ஆகிய ஊர்களில் காவிரி ஆற்று படுகையில் குடிநீர் கிணறுகள் தோண்டி அதில் இருந்துதண்ணீரை ராட்சத குழாய்கள் மூலம் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு கொண்டு வந்து சப்ளை செய்ய இத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.இதற்காக திருச்சி முக்கொம்பு பகுதியில் இருந்து 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு குழாய்கள் பதிக்கப்படவுள்ளன. இத்திட்டத்திற்கு அரசு ரூ. 616 கோடிஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ராமநாதபுரம் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 5 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள்,18 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 3,163 குடியிருப்புகள் பயன் அடையும்.
இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு 40 லிட்டர் தண்ணீர் கிடைக்கும். தமிழகத்தில் இதுவரை நிறைவேற்றப்பட்ட திட்டங்களிலேயே இது மிகப்பெரிய கூட்டு குடிநீர் திட்டமாகும்.
இத்திட்டத்தின் தொடக்க விழா ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சேதுபதி ஆண்கள் பள்ளி மைதானத்தில் இன்று நடந்தது. இதில் முதல்வர்கருணாநதி ராமநாதபுரம் காவிரி கூட்டு குடிநீர் திட்டதிக்கான அடிக்கல் நாட்டி வைத்து பேசினார். பின்னர் விழா மேடையிலேயே ஏழைகளுக்குஅரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications