மருத்துவக் கல்லூரி ராகிங்: 21 பேர் சஸ்பெண்ட்
சென்னை:சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு நர்சிங் பட்டயப் படிப்பு படித்து வரும்மாணவர்களிடம் ராகிங் செய்த மூத்த மாணவர்கள் 21 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில், செவிலியர் பயிற்சிப் பள்ளி உள்ளது. இங்கு ஆண்களுக்கானசெவிலியர் பட்டயப் படிப்பை படித்து வரும் முதலாமாண்டு மாணவர்களை கடந்த 19ம் தேதி 2ம் ஆண்டுபடிக்கும் மாணவர்கள் ராகிங் செய்தனர்.
இனிமேல் மீசை வைக்கக் கூடாது என்று முதலாமாண்டு மாணவர்களுக்கு உத்தரவிடப்பட்டது. மேலும்அவர்களை நிர்வாணமாக நடந்து வரச் செய்தும், பெண் வேடமிட்டு ஆடவும் வைத்து படம் பிடித்துகொடுமைப்படுத்தினர்.
இந்தக் கொடுமைக்குப் பயந்து 2 மாணவர்கள் படிப்பையே விட்டு விட்டு ஊருக்குத் திரும்பினர். இந்த சம்பவம்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ராகிங் குறித்து ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி டீன் முஷ்டாக் அகமதுகான் விசாரணை நடத்தினார்.
விசாரணையின்போது நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கூறி புகாரில் சிக்கிய 21 மாணவர்களின்பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் யாரும் வரவில்லை. இதையடுத்து 21மாணவர்களையும் சஸ்பெண்ட் செய்து டீன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை குறித்து மருத்துவக் கல்வி இயக்குநர் மற்றும் சுகாதாரத் துறை செயலாளருக்கு தகவல்தரப்பட்டுள்ளதாகவும், அவர்களின் வழிகாட்டுதலின்படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கான்தெரிவித்துள்ளார்.
ராகிங்கில் ஈடுபடுவோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. மேலும், ராகிங்கில் ஈடுபடும் மாணவர்களைவிசாரணையின்றி கல்லூரியிலிருந்து நீக்கலாம் என ஏற்கனவே உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பில் தெரிவித்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications