திருக்கோவிலூர்: வேன் கவிழ்ந்து 3 பேர் பலி
திருக்கோவிலூர்:திருக்கோவிலூர் அருகே வேன் கவிழ்ந்து 3 பேர் உயிரிழந்தனர் 35 பேர் படுகாயமடைந்தனர்.
திருக்கோவிலூர் அடுத்த சோழவாண்டிபுரம் கிராமத்தை சேர்ந்த 38 பேர் அருகே உள்ள சித்தலிங்கமடம் என்ற கிராமத்தில் துக்க நிகழ்ச்சிக்கு வேனில்இன்று காலை சென்றனர். வேன் திருக்கோவிலூரை அடுத்த அம்மன் கொல்லைமேடு கிராமம் அருகே வந்தபோது சாலையில் நிலை தடுமாறி அருகேஇருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் சம்பயைன் (55), ராணி (35), அஞ்சலை (32) ஆகியோர் உயிரிழந்தனர். 35 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த 35 பேரும்திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பஸ்சுடன் மோதி பற்றி எரிந்த தீப்பெட்டி லாரி
இதற்கிடையே பஸ்சுடன் மோதிய தீப்பெட்டி ஏற்றி வந்த லாரி நடு ரோட்டில் எரிந்து சாம்பலானது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்திலிருந்து குஜராத் மாநிலத்திற்கு தீப்பெட்டி பண்டல்களை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்து கொண்டிருந்தது.விருதுநகர் மாவட்டம் சிவரக்கோட்டை என்ற இடத்தில் வந்தபோது, எதிர் திசையில் வந்த பேருந்துடன் லாரி மோதியது.
அந்தப் பேருந்து பெங்களூரிலிருந்து திருவனந்தபுரம் சென்று கொண்டிருந்தது. இரு வாகனங்களும் மோதிக் கொண்டதில் தீப்பெட்டிகளுடன் வந்தலாரி தீப்பிடித்துக் கொண்டது.
தீப்பெட்டிகள் இருந்ததால் மளமளவென தீ பரவி லாரி முழுவதும் எரிந்து சாம்பலானது. தீயணைப்புப் படையினர் நீண்ட நேரம் போராடி தீயைஅணைத்தனர்.
விபத்தில் பேருந்து மற்றும் லாரியின் ஓட்டுநர்கள் படுகாயம் அடைந்தவர்கள். இந்த சம்பவத்தால் மதுரை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில்போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications