கலாமை விமர்சித்த தாக்கரே-குவியும் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

மும்பை:குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை மரியாதை இல்லாமல் மிகக் கடுமையாக விமர்சித்துள்ள சிவசேனா தலைவர் பால் தாக்கரேவுக்கு கடும் எதிர்ப்புகிளம்பியுள்ளது.

மும்பை மாநகராட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. சிவசேனாவுக்காக தாக்கரே தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டார். மும்பை அருகே தானே பகுதியில்நடந்த பிரசாரத்தில் அவர் பேசுகையில், குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை தனிப்பட்ட முறையில் மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

அவர் பேசுகையில், நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவுக்கு தண்டனை நிறைவேற்றுவதில் ஏன் இந்தத்தாமதம்?

Bal Thackeray

உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏன் கலாமிடம் அனுப்பினார்கள்? அவருக்கு இதில் என்ன வேலை இருக்கிறது? அப்சல் தாக்கல் செய்துள்ள கருணைமனுவை தள்ளுபடி செய்யாமல் ஏன் அப்துல் கலாம் தாமதம் செய்து வருகிறார்?

அப்சலின் கருணை மனுவை பார்க்க முடியாமல் அவரது நீண்ட தலை முடி, கண்களை மறைத்துக் கொண்டிருக்கிறதோ என்னவோ? அவரது கண்கள்குருடாகி விட்டன போலும்.

நாட்டில் நடப்பதை அவரால் பார்க்க முடியவில்லை. அவரால் நட்சத்திரங்களையும், நிலவையும் மட்டும்தான் பார்க்க முடிகிறது என்று கலாமைதனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசினார் தாக்கரே.

இதேபோல காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் விமர்சித்தார் தாக்கரே. வெளிநாட்டுக்காரரால் இந்த நாடு ஆளப்பட்டு வருகிறது.மன்மோகன் சிங் ஒரு பொம்மை பிரதமராக உள்ளார் என்று கூறியிருந்தார்.

தாக்கரேவின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான அம்பிகா சோனி கூறுகையில், பிறரை விமர்சித்துப் பேசுவதேதாக்கரேவின் வழக்கமாகி விட்டது. ஆனால் தற்போதைய தனது நிலை குறித்தே அவர் கவலைப்படும் நேரம் வந்து விட்டது.

தாக்கரே ஒரு கைவிடப்பட்ட மனிதர். குடும்பத்தை இழந்து விட்டார். கட்சி இரண்டாக உடைந்து விட்டது. அவர் பேசுவதை மக்கள் சீரியஸாகஎடுத்துக் கொள்வதில்லை. மாறாக, இப்போது அவர் பேசியுள்ள பேச்சால் மக்கள் கொதிப்படைந்துள்ளனர் என்றார் சோனி.

மற்றொரு காங்கிரஸ் தலைவரான சஞ்சய் நிரூபம் கூறுகையில், (இவர் ஒரு காலத்தில் தாக்கரேவின் செல்லப் பிள்ளையாக இருந்தவர்) குடியரசுத்தலைவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். அவரை அரசியல் பிரச்சினையில் இழுப்பது தவறானது.

மும்பை மாநகராட்சித் தேர்தல் உள்ளூர் பிரச்சினை. அதில் குடியரசுத் தலைவர் குறித்து பேச வேண்டிய அவசியமே இல்லை.

அப்சலுக்கு கருணை மனுவைத் தாக்கல் செய்ய உரிமை உள்ளது. அதை சட்டப்படி ஆய்வு செய்ய குடியரசுத் தலைவருக்கும் உரிமை உள்ளது. அந்தமனு ஆய்வில் உள்ளது. இந் நிலையில் கலாமை விமர்சிக்க தாக்கரேவுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று கூறியுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் தாரிக் அன்வரும் தாக்கரேவைக் கண்டித்துள்ளார். தனது நாக்கு பிறர்ந்த பேச்சால் நாட்டையேஅவமானப்படுத்தி உள்ளார் தாக்கரே. இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதேபோல இடது சாரிக் கட்சிகளும் தாக்கரே பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீத்தாராம் எச்சூரிகூறுகையில், குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அவர் தனி நபர் அல்லத, ஒரு அமைப்பு.

இந்திய அரசியல் அமைப்பை மதிக்கும் அனைவரும் குடியரசுத் தலைவரையும் மதித்தாக வேண்டும். யாரையும் விமர்சிக்க யாருக்கும் உரிமைஉண்டு. ஆனால் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசுவது ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது. ஜனநாயக முறையில் அதற்கு அனுமதியும் கிடையாதுஎன்றார் எச்சூரி.

இருப்பினும் தாக்கரேவின் பேச்சு குறித்து சிவசேனாவின் கூட்டணிக் கட்சியான பாஜக எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறது.

இந்த சர்ச்சை குறித்து பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கூறுகையில், தாக்கரே என்ன பேசினார் என்பது எனக்கு சரியாக தெரியவில்லை. குடியரசுத்தலைவரை பாஜக முழுமையாக மதிக்கிறது என்று மட்டும் கூறிவிட்டு காரில் ஏறி தப்பினார்.

பால் தாக்கரேவுக்கு பிறரை அவமானப்படுத்துவது அல்வா சாப்பிடுவது மாதிரி என்பது குறிப்பிடத்தக்கது. மதாராஸிகளை ஒழிப்போம் என்றகோஷத்துடன் மும்பை தாராவியில் வசித்த தமிழர்கள் மீது சிவசேனா நடத்திய கொலை வெறித் தாக்குதல்கள்,

மும்பையில் தாவூத் இப்ராகிம் கும்பல் ஒரு பக்கம் மாமூல் வசூலிக்க, மறுபக்கம் சிவசேனாவும் அதே வேலையைத் தான் செய்து வந்தது. மதக்கலவரத்தைத் தூண்டி விட்டு அதில் குளிர்காய்ந்து வந்த தாக்கரேவுக்கு இப்போது மக்களிடம் மவுசு இல்லை.

அவரது சகோதரியின் மகன் ராஜ் தாக்கரே கட்சியை உடைத்துக் கொண்டது போனதில் இருந்து தடுமாறி வருகிறார் தாக்கரே. இந் நிலையில் கட்சிக்குஓட்டு கேட்க வேறு விஷயமே இல்லாததால் தான் கலாம் மீது பாய்ந்துள்ளார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+