டிரவுசர், 10,000 பணம், வெவர சிறுவன்
திருச்சி:பெற்றோருடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு அரைக்கால் டிரவுசருடன் வெளியேறிய 16 வயது சிறுவன், கை நிறைய பணத்துடன் திருச்சிவிமான நிலையத்துக்கு வந்து சென்னைக்கு டிக்கெட் கேட்டான். அவனை சமாதானப்படுத்தி பெற்றோரிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.
திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று காலை ஒரு சிறுவன் வந்தான். டிக்கெட் கவுண்டருக்கு வந்த அவன் சென்னைக்கு ஒரு டிக்கெட் கொடுங்கஎன்று கூறி 10 ஆயிரம் ரூபாய் பண கட்டை நீட்டினான்.
அவனைக் கவனித்த விமான நிலைய ஊழியர்கள் சந்தேகமடைந்தனர். காரணம் 10 ஆயிரம் கட்டை தெனாவெட்டாக எடுத்து நீட்டிய அந்த சிறுவன்அரைக்கால் டிரவுசரில் இருந்தான். தம்பியைத் தனியாக கூப்பிட்டு யார், என்ன என்று விசாரித்தனர்.
அதற்கு அவன், நான் சென்னைக்கு போக வேண்டும். ஏர் டெக்கான் விமானத்தில் ஒரு டிக்கெட் கொடுங்க, பணம்தான் கொடுக்கிறேனே, உங்களுக்குஎதுக்கு இந்த தேவையில்லாத கேள்வி எல்லாம் என்று மிகத் தெளிவாக எதிர் கேள்வி போட்டுள்ளான்.
இதனால் இன்னும் சந்தேகம் வலுக்க விமான நிலைய காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தர்மராஜிடம் கொண்டு போய் பையனை நிறுத்தினர். அவரும்மென்மையாக அவனிடம் விசாரித்தார்.
அவனோ சற்றும் பயப்படாமல், அதேசமயம் சலிப்புடன், எதுக்கு இத்தனை கேள்விகள் என்று டென்ஷன் ஆகியுள்ளான். அசந்து போன போலீஸார்நிதானமாக கேள்விகளைப் போட்டு பையன் யார் என்பதை அறிந்தனர்.
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த தங்கமுத்து என்பவரின் மகன்தான், டிரவுசருடன் விமானம் ஏற வந்த சிறுவன். பெயர்பாலசுப்ரமணியன், 16 வயதாகிறது. பிளஸ் ஒன் படிக்கிறான்.
வீட்டில் அப்பா, அம்மா திட்டியதால் கோபமடைந்த அவன், அப்பா வைத்திருந்த பணத்தை எடுத்துக் கொண்டு திருச்சிக்கு வந்து விட்டான்.வந்தவன், அப்படியே சென்னைக்குப் போய் ஊர் சுற்றிப் பார்த்து, பெற்றோர் கூல் ஆனவுடன் வீடுதிரும்பலாம் என நினைத்துள்ளான்.
திருச்சியிலிருந்து எப்படி சென்னைக்குப் போகலாம் என யோசித்தவனுக்கு பேருந்து, ரயிலில் போக விருப்பம் இல்லை. நம்ம கிட்டதான் 10,000ரூபாய் இருக்கிறதே, விமானத்தில் போகலாம் என எண்ணி ஆட்டோ பிடித்து விமான நிலையம் வந்துள்ளான்.
இங்கு வந்து டிக்கெட் கேட்கும்போதுதான் சிக்கிக் கொண்டான். பின்னர் தங்கமுத்துவுக்குத் தகவல் கொடுத்து அவரது மகனை போலீஸார்ஒப்படைத்து சில அறிவுரைகளையும் கூறி அனுப்பி வைத்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications