ஜெ திராட்சை தோட்டமும் பாலாறும்-துரைமுருகன்
சென்னை:தனது திராட்சை தோடத்தில் ஆந்திர அரசு கை வைத்து விட்டது என்ற செய்தி வந்ததும் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதாகஜெயலலிதா அறிக்கை விட்டு குழப்படி செய்ய முயல்கிறார் என பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டப்போவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார். இதற்கு பதில்அளித்து துறைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்ட பூமி பூஜை நடத்தியுள்ளதாக ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார். பாலாற்றின் குறுக்கேஆந்திர அரசு அணை கட்ட முயற்சி செய்கிறது என்ற செய்தி வந்தபோது சட்டமன்றத்திலும், வேலூர் மாவட்டத்திலும் இந்த பிரச்சனை குறித்து பேசிஆர்ப்பாட்டம் நடத்தியவர்களில் நானும் ஒருவன்.
இந்த பிரச்சனை குறித்து இதுவரை மெத்தனமாக இருந்துவிட்டு உப்புக்கு சப்பாணி என்பது போல பெயருக்கு ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில்கொடுத்துவிட்டு அதிலும் நமக்கு உள்ள உரிமைகளை எடுத்து வைக்காமல், பின்னர் அந்த வழக்கு என்னவாயிற்று என்று திரும்பியும் பார்க்காமல்வீட்டுக்கு போனவர் ஜெயலலிதா.
இந்த பிரச்சனை குறித்து ஹைதராபாத்தில் உள்ள திராட்சை தோட்டத்துக்கு ஒய்வு எடுக்க பல முறை சென்ற போது ஆந்திர முதல்வரை ஒருமுறையாவது சென்று விவாதித்தது உண்டா? அல்லது எந்த அமைச்சரையாவது ஆந்திராவிற்கு அனுப்பியது உண்டா?
ஆனால் கலைஞர் ஆட்சி அமைந்த பின் உள்ளாட்சி துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர் பொன்முடியும் ஆந்திர முதல்வரை சந்தித்துதடுப்பணை விவகாரமாக விவாதித்தது ஜெயலலிதாவிற்கு உண்மையிலேயே மறந்து விட்டதா?
ஆந்திரா அரசு இந்த பிரச்சனையில் எந்த நடவடிக்கையும் எடுக்காது. அப்படி ஒரு நிலை வந்தால் தமிழகத்தோடு பேச்சுவார்த்தை நடத்தியபின் தான்எந்த நடவடிக்கையும் எடுக்கும் என அம்மாநில முதல்வர் தமிழக அமைச்சர்களிடம் வாக்குறுதி அளித்துள்ளார்.
அதையும் மீறி தடுப்பணை கட்ட முயன்றதாக செய்தி வந்த போது நான் ஆந்திர நீர்பாசன துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். தமிழகஅரசின் தலைமை செயலாளர் ஆந்திர அரசோடு தொடர்பு கொண்டு இது குறித்து பேசி வருகிறார்.
தமிழக அரசு பொதுபணிதுறை அதிகாரிகள் தடுப்பணை கட்டப்படும் என்று கூறப்படுகின்ற இடத்துக்கு நேரில் சென்று விசாரித்து உண்மைநிலையை அறிந்து ஆந்திர அரசு தடுப்பணை கட்ட அதிகாரப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை எனதெரிவித்திருக்கிறார்கள்.
தமிழக முதல்வர் கருணாநிதி அண்டை மாநில உறவு கெடாமல் தீர்வு காண்பதற்கு பல்வேறு வழிகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் ஆந்திர அரசுதனது திராட்சை தோடத்தில் கை வைத்து விட்டது என்ற செய்தி வந்ததும் ஜெயலலிதா ஆந்திராவுக்கு எதிராக அறிக்கை விடுகிறார்.
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுகிறது என்றும் அதை தமிழக அரசு தடுக்கவில்லை என்று குற்றம் சாட்டுகிறார். உண்மையானவிஷயம் என்னவென்று தெரிந்து கொள்ளாமல் நுனிப்புல் மேய்வது என்பார்களே, அதுபோன்ற நிலையில் விவாதத்தில் கலந்து கொள்வதுஜெயலலிதாவுக்கு நிகர் ஜெயலலிதா தான்.
இந்த பிரச்சனை ஜெயலலிதவுக்கு ஒரு அரசியல். ஆனால் எங்கள் மாவட்டத்திற்கும் தமிழகத்திற்கும் உயிர் பிரச்சனை, உரிமை பிரச்சனை நாங்கள்இந்த பிரச்சனையில் எப்படி இருப்போம் என்று நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும் என கூறியுள்ளார் துரைமுருகன்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications