நகைக் கடை அதிபரின் 5 வயது மகன் கடத்தல்
சென்னை:சென்னையில் நகைக் கடை அதிபரின் 5 வயது மகன் கடத்தப்பட்டான்.
மணலியில் நகைக் கடை வைத்திருப்பவர் தானா ராம். இவர் அதே பகுதியில் காமராஜர் தெருவில் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள்,ஒரு மகள் உள்ளனர்.
தானா ராமின் 2வது மகன் விமல் (5) அருகே உள்ள மகாத்மா காந்தி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் யூ.கே.ஜி படித்து வருகிறான். நேற்று முஹர்ரம்பண்டிகையையொட்டி அரசு விடுமுறை என்பதால் விமல் தனது நண்பர்களுடன் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தான். ஆனால், அவன் வீடுதிரும்பவில்லை.
இரவு 8 மணிவரை விமல் வீடு திரும்பாததால் தானா ராம், மற்றும் அவரது மனைவி ஜக்ரி இருவரும் பல்வேறு இடங்களில் தேடினர். நண்பர்கள்,உறவினர்கள் வீடுகளில் தேடியும் விமல் கிடைக்காததால் தானா ராம் இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்தார்.
இது குறித்து போலீசார் தனிப் படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ் விசாரணையில், இரு தினங்களுக்கு முன் விமல் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத 2 பேர் தானாராமை பற்றியும் அவர் எப்போது கடைக்குச் செல்வார் என்பது குறித்தும் விமலிடம் விசாரித்துள்ளனர். மேலும் அவனிடம் நெருக்கமாகபழகியுள்ளனர் என்றும் தெரிய வந்தது.
இதுகுறித்து விமல் தனது தாயாரிடம் கூறியுள்ளான். ஆனால் அவர் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அந்த மர்ம ஆசாமிகள் தான்விமலை கடத்தியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
விமல் நேற்றிரவு விளையாடிக் கொண்டிருந்த போது 2 பேர் அவனிடம் பேசியதாக அவனோடு விளையாடிய சிறுவர்கள் தெரிவித்துள்ளனர்.அவர்கள் விளையாடி முடிந்து வீட்டுக்கு கிளம்பும் போதும் விமல் அங்கேயே நின்று கொண்டிருந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications