கோவையில் 500 பேரிடம் கிட்னி திருட்டு!
கோவை:கோவையில் ஒரு மிகப் பிரபலமான தனியார் மருத்துவமனையில் 500க்கும் மேற்பட்டோரிடம் சிறுநீரகங்கள் திருடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
குமாரபாளையத்தைச் சேர்ந்த சுரேஷ் (28) என்ற கூலித் தொழிலாளி போலீசாரிடம் ஒரு புகார் கொடுத்தார். அதில், கோபால் என்பவரிடம் நான்வட்டிக்கு ரூ. 50,000 கடன் கேட்டேன். அப்போது கடன் எதுக்கு, சும்மாவே தருகிறேன். ஒரு தொழிலதிபருக்கு ரத்தம் தேவைப்படுகிறது. அதைகொடுத்தால் உனக்கு பல ஆயிரம் கிடைக்கும் என்றார்.
இதையடுத்து அவருடன் கோவை அவினாசி ரோட்டில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு கோபாலுடன் சென்றேன். அங்கு மயக்க ஊசிபோட்டனர். பல மணி நேரம் கழித்து விழித்துப் பார்த்தபோது எனது இடுப்புப் பகுதியில் தையல்கள் போடப்பட்டிருந்தன. இது குறித்து கேட்டபோதுஅதிக ரத்தம் தேவைப்பட்டதால் காயம் ஏற்பட்டது என்று கூறி ரூ. 50,000த்தை தந்தனர்.
சில நாட்களுக்குப் பின்னர் தான் எனது இடதுபக்க கிட்னி எடுக்கப்பட்ட விவரமே எனக்குத் தெரியவந்தது. இது குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று தனது புகாரில் சுரேஷ் கூறியுள்ளார்.
இதையடுத்து கோபாலை போலீசார் விசாரிக்கச் சென்றபோது, விஷயம் அறிந்து அவர் தலைமறைவாகிவிட்டார். இதைத் தொடர்ந்து அவரதுமனைவி கமலாவிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
கடந்த 6 ஆண்டுகளாக கிட்னி புரோக்கராக செயல்பட்டு வரும் கோபால் அந்த தனியார் மருத்துவமனையின் உதவியோடு ஆயிரத்துக்கும்மேற்பட்டவர்களை பொய்யான காரணம் கூறி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதில் 500 பேரிடமாவது கிட்னிஎடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ள கமலா, ஒவ்வொரு கிட்னிக்கு எனது கணவருக்கு ரூ. 10,000 கமிஷன் கிடைத்தது என்றும் கூறியுள்ளார்.
மேலும் கிட்னி எடுக்கப்பட்டவருக்கு அந்த மருத்துவமனை ரூ. 50,000 தரும் என்றும் கூறியுள்ளார்.
இதையடுத்து கோபாலைப் பிடிக்க போலீஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இவருக்கும் மருத்துவமனைகளுக்கும் உள்ள தொடர்புகள்குறித்து விசாரணை நடக்கிறது.
ஏற்கனவே சென்னையில், சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவப் பெண்களிடம் ஒரு கும்பல் சிறுநீரகங்களை திருடிய சம்பவம் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ள நிலையில் கோவையில் ஒரே நபர் 500க்கும் மேற்பட்டோரிடம் சிறுநீரகங்களை முறைகேடாக திருடியுள்ளது பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications