புலிகளின் கடற்படை தளபதிக்கு இன்டர்போல் குறி
கொழும்பு:விடுதலைப் புலிகளின் கடற் புலிகள் பிரிவு தலைவரான கர்னல் சூசையை கைது செய்ய சர்வேச போலீஸ் அமைப்பான இன்டர்போல்உத்தரவிட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய புலிகள் இயக்கத் தலைவர்களைப் பிடிக்க ஏற்கனவே இன்டர்போல்வாரண்ட்டுகளைப் பிறப்பித்துள்ளது.
![]() |
இந் நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற் பிரிவான கடல் புலிகள் பிரிவின் தலைவரான கர்னல் சூசையைக் கைது செய்ய இன்டர்போல்வாரண்ட் பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து கொழும்பில் உள்ள இன்டர்போல் அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், இலங்கைப் படைகளுக்கு எதிராகவும், மக்களுக்குஎதிராகவும் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டார் என்ற வகையில் சூசையைப் பிடிக்க உலக அளவிலான வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரபாகரனைப் போல அவரையும் பிடிக்க இன்டர்போல் திட்டமிட்டுள்ளது. வாரண்ட் பிறப்பிக்கப்பட்டவர்கள் இலங்கையை விட்டுவெளியேறினால் எந்த நாட்டுக்குச் சென்றாலும், அந்த நாட்டில் கைது செய்யப்படுவார்கள் என்றார்.
பஸ்ஸில் குண்டு-6 போலீசார் பலி:
இதற்கிடையே கொழும்பில் இன்று காலை போலீஸ் பஸ்ஸில் குண்டு வெடித்தில் 6 காவலர்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
மட்டக்களப்பு பல்கலைகழகம் முன் இச் சம்பவம் நடந்தது. இந்த வெடிகுண்டு தாக்குதலை விடுதலை புலிகள் தான் நடத்தியதாக அந்நாட்டு ராணுவ செய்தி தொடர்பாளர் பிரசாத் சமரசிங்ஹா கூறியுள்ளார்.
இலங்கைக்கு 4.5 பில்லியன் டாலர்:
இலங்கையின் வளர்ச்சித் திட்டங்களுக்காக அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நன்கொடையாளர் நாடுகள் 4.5 பில்லியன் டாலர் நிதி அளிப்பதாக உறுதி அளித்துள்ளன.
இலங்கைக்கு நிதியுதவி அளிக்கும் சர்வதேச நன்கொடையாளர் நாடுகளின் மாநாடு காலே நகரில் நடந்தது. இதில் 50 நாடுகளைச் சேர்ந்த 350க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இம் மாநாட்டில், விடுதலைப் புலிகளுடனான மோதலை இலங்கை அரசு கைவிட்டு விட்டு அமைதி முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால் நிதியுதவி அளிப்பது நிறுத்தப்படும் எனஎச்சரிக்கப்பட்டது.
இந்த நிலையில், 2007-09ம் ஆண்டுக்கான இலங்கை அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு 4.5 பில்லியன் டாலர் நிதியுதவி அளிக்க நன்கொடையாளர் நாடுகள் முன்வந்திருப்பதாக இலங்கை அரசுதெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநாட்டின் முடிவில் இலங்கை முதலீட்டுத்து துறைக்கான அமைச்சர் சரத் அமுனுகாமா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
2007-09ம் ஆண்டு காலத்திற்கான இலங்கை வளர்ச்சி திட்டங்களுக்கு 4.5 பில்லியன் டாலர் நிதியுதவி அளிக்க நன்கொடையாளர் நாடுகள் முன் வந்துள்ளன.
இக் கூட்டத்தில் அடுத்த 10 ஆண்டுக்கான வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டது.
அரசியல் பொருளாதாராம், சுனாமி நிவாரணம், பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, தீவிரவாதம், அமைதி முயற்சிகள், மனித உரிமைகள், மனிதாபிமான உதவிகள் உள்ளிட்டவை குறித்து இந்தகூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
அமைதி முயற்சிகளை தீவிரமாக மேற்கொள்வதோடு, இனப் பிரச்சினைக்கும் விரைவான தீர்வைக் காண அந்த நாடுகள் வலியுறுத்தின என்றார் அமுனுகாமா.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?













Click it and Unblock the Notifications