ரூ.54000 கோடிக்கு கோரஸை வாங்கிய டாடா
மும்பை:ஆங்கிலோ-டச்சு எஃகு நிறுவனமான கோரஸ் நிறுவனத்தை, டாடா நிறுவனம் ரூ. 54,000 கோடிக்குவாங்கியுள்ளது. இதன் மூலம் உலகின் 5வது மிகப் பெரிய இரும்பு உற்பத்தி நிறுவனம் என்ற நிலையை டாடாஸ்டீல் நிறுவனம் அடைந்துள்ளது.
![]() |
சமீபத்தில் லண்டனைச் சேர்ந்த இந்திய தொழிலதிபர் லட்சுமி மிட்டல், பிரான்ஸின் ஆர்சலர் நிறுவனத்தை வாங்கிஇந்தியர்களுக்கு கெளரவம் தேடிக் கொடுத்தார். இதன் மூலம் உலகின் முன்னணி இரும்பு உற்பத்தியாளரானார்மிட்டல்.
இப்போது டாடா நிறுவனம் புதிய பெருமையைத் தேடிக் கொடுத்துள்ளது.
ஆங்கிலோ-டச்சு எஃகு நிறுவனமான கோரஸ் நிறுவனத்தை டாடா ஸ்டீல் நிறுவனம் 11 பில்லியன் (இந்தியமதிப்பில் ரூ. 54 ஆயிரம் கோடி) டாலருக்கு வாங்கியுள்ளது.
கோரஸை வாங்க பிரேசில் நாட்டின் சிஎஸ்என் நிறுவனமும் கடுமையாக போட்டியிட்டது. இருவரும் அதிகபட்சவிலை தர முன் வந்ததால் நேற்றிரவு 9 சுற்று ஏலம் நடந்தது.
இறுதியில் டாடா ஸ்டீல் வெற்றி பெற்றது. கோரஸ் நிறுவனத்தின் ஒரு பங்குக்கு பிரேசில் நிறுவனம் 603 பென்ஸ்தருவதாக ஏலத்தில் கூறியது. அதை விட கூடுதலாக 5 பென்ஸை வைத்து, அதாவது 608 பென்ஸ், டாடா ஸ்டீல்கோரஸைத் தட்டிச் சென்றது.
![]() |
ஐரோப்பாவின் 2வது மிகப் பெரிய இரும்பு எஃகு நிறுவனம் கோரஸ் என்பது குறிப்பிடத்தக்கது. டாடா ஸ்டீல்,கோரஸ் நிறுவனத்தை வாங்கியுள்ளது தொடர்பான ஒப்பந்தம் உள்ளிட்ட நடைமுறைகள் மார்ச் இறுதிக்குள்முடிவடையும் எனத் தெரிகிறது.
கோரஸ் நிறுவனத்தை வாங்கிய வெற்றிக் களிப்பில் மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் டாடா குழுமதலைவர் ரத்தன் டாடா. அப்போது அவர் கூறுகையில், இது டாடாவுக்குக் கிடைத்த வெற்றி அல்ல,இந்தியாவுக்குக் கிடைத்த வெற்றி. இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
இதேபோல கோரஸ் நிறுவன தலைவர் ஜிம் லெங் கூறுகையில், பங்குதாரர்களின் நலன், நிறுவனத்தின்எதிர்காலம் ஆகியவற்றைக் கொண்டு இந்த விலைக்கு கோரஸ் நிறுவனத்தை டாடா ஸ்டீல் நிறுவனத்திடம்ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது என்றார்.
கோரஸை வாங்கியதன் மூலம் உலகிலேயே ஐந்தாவது மிகப் பெரிய இரும்பு எஃகு நிறுவனமாக டாடா ஸ்டீல்உயர்ந்துள்ளது.
உலகின் மிகப் பெரிய எஃகு நிறுவனமாக மிட்டலின் ஆர்சலர்-மிட்டல் நிறுவனம் உள்ளது குறிப்பிடத்தக்கது.இதைத் தொடர்ந்து ஜப்பானின் நிப்பான் ஸ்டீல், தென் கொரியாவின் போஸ்கோ ஆகியவை உள்ளன.
டாடா ஸ்டீல் மற்றும் கோரஸ் நிறுவனங்கள் இணைந்து ஆண்டுக்கு 23 மில்லியன் டன் எஃகை உற்பத்தி செய்யும்.
இந்த நிகழ்வுக்கு மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் கமல்நாத்தும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்தியபொருளாதாரம் வலுவானது என்பதை வெளிக்காட்டுவதாக இது அமைந்துள்ளது. உலக அளவில் இந்தியாகுறித்த எண்ணம் மாறி வருவதை பிரதிபலிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?














Click it and Unblock the Notifications