கொண்டு வரப்பட்டனர் கிரில் கொள்ளையர்கள்
சென்னை:கொல்கத்தாவில் வைத்து வளைத்துப் பிடிக்கப்பட்ட 10 கிரில் கொள்ளையர்களும் ரயில் மூலம் இன்று சென்னை கொண்டு வரப்பட்டனர். அவர்களைநீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் போலீஸ் காவலில் எடுக்க சென்னை போலீஸார் முடிவுசெய்துள்ளனர்.
![]() |
சென்னை, மதுரை, வேலூர் உள்ளிட்ட பல நகரங்களில் பூட்டியிருக்கும் வீடுகளின் கிரில் ஜன்னல்களை பெயர்த்து உள்ளே புகுந்து நகை, பணத்தைதிருடிச் செல்லும் கும்பல் கடந்த 6 வருடங்களாக காவல்துறையை டபாய்த்து வந்தது.
இந்தக் கொள்ளைக் கும்பலைப் பிடிக்க சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் ஜாங்கிட்டின் நேரடி மேற்பார்வையில் 7 தனிக் குழுக்கள்அமைக்கப்பட்டன. இந்தக் குழுவினரின் கடும் உழைப்பின் பலனாக தற்போது கிரில் கொள்ளையர்கள்கூண்டோடு பிடிபட்டுள்ளனர்.
மேற்கு வங்க போலீஸாரும் தமிழக போலீஸ் குழுக்களுக்கு பேருதவியாக இருந்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தக் கொள்ளைக் கும்பலை போலீஸார் மேற்கு வங்க மாநிலத்தில் வைத்து வளைத்துப் பிடித்தனர். அவர்களின்பெயர்கள்:
ஸ்வபன் சாஹா (வயது 42), இவர்தான் கும்பலின் தலைவர்), ஜாகர் அலி கான் (20), சாஹின் கான் (22), லூபர் ஷேக் (32), அன்வர் புர்கைட் (24),அபு மனான் (46), ஒஹைதுல் மட்டபார் (23), அவரது மனைவி கரீமா பீபி (20), மிஜனூர் தலுக்தர் (36), அவரது இரு மனைவிகள் நூனேஹரா பீபி(33), சஜீனா தலுக்தர் (33).
பிடிபட்டவர்களில் ஒரு பெண் கர்ப்பிணியாக இருப்பதால் அவரைத் தவிர மற்ற 10 பேரையும் போலீஸார் பலத்த பாதுகாப்புடன் இன்று காலைசென்னைக்கு அழைத்து வந்தனர்.
![]() |
கும்பலில் 9 பேர் வங்கதேசத்தின் மதாரிபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். சட்டவிரோதமாக மேற்கு வங்க மாநிலத்திற்குள் ஊடுறுவி, அங்குள்ளஜாதவ்பூர் மாவட்டத்தில் குடியேறியவர்கள். அங்கிருந்து ரயில் மூலம் சென்னைக்கு வந்துகொள்ளையடிப்பதை தொழிலாக செய்து வந்தனர்.
தமிழகத்தில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மதாரிபூகரில் கொண்டு போய் விற்றுள்ளது இக்கும்பல்.
கொள்ளைக் கும்பல் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் காவல்துறை ஆணையர் லத்திகா சரண் கூறுகையில்,இவர்கள் மீது மொத்தம் 79 கிரில் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இக்கும்பல் ரூ. 23 லட்சம் மதிப்புள்ள 1,358 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துள்ளது. 66 வழக்குகள் சென்னையிலும், .ந்தைய செங்கை கிழக்குகாவல்துறையிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 10 வழக்குகள் மதுரையிலும், நெல்லை, வேலூர், பெங்களூரில் தலா ஒரு வழக்கும் இவர்கள் மீதுபதிவாகியுள்ளது.
எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் இவர்களை ஆஜர்படுத்தவுள்ளோம். அதன் பின்னர் போலீஸ் காவலில் இவர்கள்எடுக்கப்படுவார்கள். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி என்னென்ன குற்றங்கைள செய்துள்ளார்கள்,எங்கெல்லாம் திருடியுள்ளார்கள் என்பது கண்டறியப்படும்.
மணலி அருகே பள்ளிச் சிறுவன் காணாமல் போனது தொடர்பாக மாதவரம், வண்ணாரப்பேட்டை துணை ஆணையர்கள் தலைமையில்தனிப்படைகள் அமைக்ப்பட்டு தீவிரமாக தேடி வருகிறோம்.
பணம் கேட்டு அந்த சிறுவன் கடத்தப்பட்டுள்ளான். அவனைக் கடத்திய கும்பல் தொலைபேசியில் பேசி மிரட்டியுள்ளது. அவர்கள் எங்கிருந்துபேசினார்கள் என்பதை அறியும் முயற்சிகள் நடந்து கொண்டுள்ளன. விரைவில் குற்றவாளிகளைப்பிடிப்போம்.
பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் குறித்து மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். வெளியில் விளையாட அனுப்பும்போதும், பள்ளிக்குஅனுப்பும்போதும் அவர்களது பாதுகாப்பு குறித்து கவலை காட்ட வேண்டும்.
ஆட்டோக்களில் செல்லும் குழந்தைகளாக இருந்தால் ஒரே ஆட்டோவில் அனுப்ப வேண்டும். அடிக்கடி ஆட்டோக்களை மாற்றுவதைத் தவிர்க்கவேண்டும். அறிமுகம் இல்லாதவர்களிடம் தங்களது குழந்தைகள் பழகுவதை அனுமதிக்கக் கூடாதுஎன்றார் லத்திகா சரண்.














Click it and Unblock the Notifications