தேர்தல் ஆணையர் விவகாரத்தில் ஜாதி புகுந்தது!
சென்னை:தமிழக தேர்தல் ஆணையரை மாற்றக் கோரும் விவகாரத்தை ஜாதிப் பிரச்சினையாக்கி உள்ளார் தமிழ்நாடு வீரவன்னியர் பேரவைத் தலைவரும், முன்னாள் எம்.பியுமான ஜெகத்ரட்சகன்.
சென்னை மாநகராட்சித் தேர்தல் வன்முறை தொடர்பாக, திமுக கூட்டணியினர் ராஜினாமா செய்த 98 வார்டுகள்உள்பட மொத்தம் 100 வார்டுகளுக்கு மறு தேர்தல் நடைபெறவுள்ளது.
ஆனால் தேர்தல் ஆணையராக சந்திரசேகரன் இருக்கும் வரை தேர்தலில் பங்கேற்க மாட்டோம் என அதிமுக,மதிமுக ஆகிய கட்சிகள் கூறியுள்ளன. மேலும் சந்திரசேகரனை மாற்றக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கும்தொடரப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையராக உள்ள சந்திரசேகரன், கடந்த திமுக ஆட்சியில், தமிழ் வளர்ச்சித் தறை ஆணையராகஇருந்தவர். பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனின் தூரத்து உறவினர். வன்னியர் சமூகத்தைச்சேர்ந்தவர்.
இந் நிலையில், சந்திரசேகரனை மாற்றக் கோரும் பிரச்சினையை ஜாதிப் பிரச்சினையாக மாற்றியுள்ளார்ஜெகத்ரட்சகன். வீர வன்னியர் பேரவை என்ற அமைப்பை நடத்தி வரும் இவர் ஜனநாயக மக்கள் கழகம் என்றஅரசியல் கட்சியையும் நடத்தி வருகிறார். பல்வேறு கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். எம்.பியாகவும்இருந்தவர்.
ஆர்.எம்.வீரப்பனுக்கு வலது கரம் போல திகழும் இவர் ஆழ்வார்கள் ஆய்வு மையம் என்ற அரசியல் சாராதநல்ல ஒரு அமைப்பையும் நடத்தி வருபவர். டாக்டர் ராமதாஸுக்கு எதிராக அரசியல் நடத்தி வரும்ஜெகத்ரட்சகன், ராமதாஸ், வன்னியர்களின் ஏக போக உரிமையாளர் அல்ல என்ற கருத்தைக் கொண்டவர்.
இந் நிலையில் சந்திரசேகரன் விவகாரத்தில் ஜாதியைப் புகுத்தி அறிக்கை விட்டுள்ளார் ஜெகத்ரட்சகன்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்டு, சமுதாயத்தின் கடைக் கோடியில் உள்ளவர்களாக வன்னியசமுதாயத்தினர் இருந்து வருகிறார்கள்.
கல்வியிலும், பொருளாதாரத்திலும் மிகவும் பின் தங்கிய நிலையில், இந்த மண்ணையும், விண்ணையும் நம்பியேவாழ்ந்து கொண்டிருக்கிற மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகமான வன்னியர் சமூகத்தை சார்ந்தவர்கள் வாடிக்கிடந்த நேரதில்,
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடுகிற வள்ளலாக திகழ்கிற முதல்வர் கருணாநிதிதான் பெரும்பான்மைசமூகமாக இருக்கிற வன்னியர் சமூகத்திற்கு தனி இட ஒதுக்கீடு தந்து அந்த மக்களின் நீண்ட காலக் கனவைநிறைவேற்றித் தந்தவர்.
இந்த இட ஒதுக்கீட்டுக்காக உயிர் நீத்த தியாகிகளின் குடும்பங்களுக்கு ஓய்வூதியம் வழங்கிய உத்தமத் தலைவர்அவர். அது மட்டுமல்ல, ஒரு காலத்தில், பள்ளிக் கூடங்களின் படிக்கட்டுக்களையே பார்க்காத வன்னியர்சமுதாயத்தை சார்ந்தவர்கள் இன்றைக்கு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களாகவும், தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்களாகவும், நீதிமன்றங்களில் நீதியரசர்களாகவும் இருக்கிறார்கள்.
முதன் முதலாக தமிழக முதல்வரின் செயலாளராக வன்னிய சமூகத்தைச் சேர்ந்தவரை வைத்ததும், மீண்டும் 5வதுமுறையாக முதல்வர் பொறுப்பேற்றதும் வன்னியரை தனது செயலாளராக நியமித்துக் கொண்டதும் கருணாநிதிதான்.
இந் நிலையில்தான் இதுவரையில் எண்ணிப் பார்க்காத இந்த வன்னிய சமூகத்துக்கு வாராது வந்த மாமணியாய்தமிழகத் தேர்தல் ஆணையத்தின் தலைவராக மிகவும் பிற்படுத்தப்பட்ட வன்னியச் சமுதாயத்தைச் சேர்ந்தஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரசேகரனை நியமித்து வன்னியர் சமூகத்துக்குப் பெருமை தேடிக் கொடுத்தார்.
நேர்மையும், வாய்மையும், தூய்மையும், கடவுள் பக்தியும் கொண்டவராகத் திகழ்கிறவர் சந்திரசேகரன்.
இவரைப் போன்ற பல வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த அதிகாரிகளைக் கடந்த ஆட்சியில், 5 ஆண்டுகள்முக்கியத்துவமே இல்லாத துறைகளில் வன்னியர் என்ற ஒரே காரணத்திற்காக புறக்கணித்தார்கள்.
ஆனால் கலைஞர்தான் வன்னியர் சமூகத்துக்கு உயர்வு தர வேண்டும் என்பதற்காக சந்திரசேகரனை தமிழகத்தேர்தல் ஆணையராக நியமித்தார்.
இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும், சந்தர்ப்பவாதஅரசியல்வாதிகளும், முற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இவரை எப்படியாவது பதவி நீக்கம்செய்ய வேண்டும் என்பதற்காக பொய்யான காரணங்களைத் தேடி நாள்தோறும் அறிக்கை விட்டுக்கொண்டிருப்பதோடு, நீதிமன்றங்களையும் இதற்காக நாடியுள்ளார்கள்.
வன்னியர் சமூகத்திற்கு உயரிய நிலையை கருணாநிதி அளித்துள்ளார். இந்த நிலையை மாற்றுவதற்கு யார்முற்பட்டாலும், அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், அவர்களை எதிர்கொள்வதற்கு பல கோடிவன்னியர்கள் கொதித்தெழுவார்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும்.
சிங்கத்தை இடறுகிற வேலையை யார் செய்தாலும் அதன் பலனை அவர்கள்தான் அனுபவிக்க வேண்டும்என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெகத்ரட்சகன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications