மது சூதனன் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:முன்னாள் அதிமுக அமைச்சர் மதுசூதனன் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஸ்ரீனிவாசனின் மனைவி ராஜகுமாரி. இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல்செய்திருந்தார்.

அந்த மனுவில், கடந்த 1997ம் ஆண்டு எனது கணவர் விபத்தில் இறந்தார். இதையடுத்து நான் தனியாக வசித்து வருகிறேன்.

சென்னை அருகே திருவிளங்கோடு என்ற இடத்தில் எனக்குச் சொந்தமாக நிலம் உள்ளது. முன்னாள் அதிமுக அமைச்சர் மதுசூதனன், சில ரவுடிகளைவீட்டுக்கு அழைத்து வந்து என்னை மிரட்டி நிலப் பத்திரங்களை பறித்துக் கொண்டு சென்று விட்டார்.

மேலும் அந்த நிலத்தை தனது மனைவி ஜீவா பெயரில் மாற்ற முயற்சித்தார். இதை அறிந்த நான் பத்திரத்துறை அதிகாரிகளிடம் சென்று புகார்தெரிவித்தேன்.

இதனால் கோபமடைந்த மதுசூதனன், மீண்டும் ரவுடிகளுடன் எனது வீட்டுக்கு வந்து கத்தி முனையில் என்னிடமிருந்த 120 பவுன் நகைகளைப்பறித்துக் கொண்டார். மேலும், உன் கணவர் இறந்தது தொடர்பாக சந்தேகம் எழுப்பி பிரச்சினை செய்தால், தொலைத்து விடுவேன், உனதுகணவருக்கு ஏற்பட்ட கதிதான் உனக்கும் ஏற்படும் என்றும் எச்சரித்து விட்டுச் சென்றார்.

அவர் கூறியதை வைத்துப் பார்க்கும்போது எனது கணவர் மரணம் குறித்து சந்தேகமாக உள்ளது. அவரது மரணத்தில் மதுசூதனன்சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படுகிறேன்.

இதுதொடர்பாக மதுசூதனன் குறித்தும், அவர் பறித்துச் சென்ற நகைகளை மீட்டுத் தரக் கோரியும் போலீஸில் புகார் கொடுத்தேன். பலமுறை புகார்கூறியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே நீதிமன்றம் தலையிட்டு மதுசூதனன் மீது நான் கொடுத்த புகார்கள் மீது நடவடிக்கைஎடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி கே.என்.பாட்ஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பாட்ஷா, ராஜகுமாரியின் புகாரைப் பதிவுசெய்து உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+