காவிரி தீர்ப்பு: அச்சத்தில் கர்நாடகத் தமிழர்கள்
பெங்களூரு:காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வரவுள்ளதைத் தொடர்ந்து கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் முழுபாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம், கர்நாடகத் தமிழர் பேரவை ஆகியவை கோரிக்கைவிடுத்துள்ளன.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு பிப்ரவரி 5ம் தேதி வெளியாகிறது. தீர்ப்பு தமிழகத்திற்குச் சாதகமாக அமையும் என பொதுவானஎதிர்பார்ப்பு உள்ளது.
ஏற்கனவே காவிரி நடுவர் மன்றம், தமிழகத்துக்கு ஆண்டுதோறும் கர்நாடகா 205 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும் என 1991ம் ஆண்டு இடைக்காலத்தீர்ப்பு வழங்கியது. அப்போது கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக பெரும் வன்முறை, கலவரம் வெடித்தது.
பெங்களூர், மைசூர், மாண்டியா, சென்னப்பட்டனா உள்ளிட்ட தமிழர்கள் அதிக அளவில் வசிக்கும் பகுதிகளில் குறி வைத்துத் தாக்கப்பட்டனர். பலர்உயிரிழந்தனர், தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. வீடுகள், சொத்துக்களை இழந்து தமிழர்கள் ஆயிரக்கணக்கில் தமிழகத்திற்குஅகதிகளாக ஓடி வந்தனர்.
இந்த நிலையில் இறுதித் தீர்ப்பு வெளியாகவுள்ளது. எனவே தமிழகத்திற்குச் சாதகமான தீர்ப்பு வந்தால் 1991ம் ஆண்டைப் போல இந்த முறையும்பெரும் வன்முறை வெடிக்கும் என்ற அச்சம் கர்நாடகத் தமிழர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
இதைத் தொடர்ந்து கர்நாடக மாநில திமுக தலைவர் வி.டி.சண்முகம் தலைமையில் கர்நாடக தமிழ் அமைப்புகள் .ன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில்இறங்கியுள்ளன.
கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் கோரிக்கைகள்விடுக்கப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக கர்நாடகத் தமிழர் பேரவை தலைவர் ஏ.பி.சண்முகசுந்தரம், குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், பிரதமர் மன்மோகன் சிங், உள்துறைஅமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஆகியோருக்கு தந்தி அனுப்பியுள்ளார்.
மேலும், கர்நாடக ஆளுநர் டி.என். சதுர்வேதி, முதல்வர் குமாரசாமி, மாநில போலீஸ் அமைச்சர் எம்.பி.பிரகாஷ், டிஜிபி சீனிவாஸ், முதன்மைச்செயலாளர் மகிஷி ஆகியோரை நேரில் சந்தித்தும் இதுதொடர்பாக கோரிக்கை வைத்துள்ளார்.
கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் சார்பில் பெங்களூர் மாநகர காவல்துறை ஆணையர் நீலம் அச்சுதராவை நேரில் சந்தித்து தமிழர்களுக்கு முழுப்பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என அச்சுதராவும் உறுதியளித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications