அமிர்தானந்த மயி ஒரு அருள்முத்து-கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டனம்:ஏழைகளுக்கு உதவும் அருள் முத்தாக, நல் முத்தாக மாதா அமிர்தானந்த மயி விளங்குகிறார் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

நாகையில், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமிர்தானந்த மயியின் மடம் சார்பில் இலவசமாக வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன.சாமந்தான்பேட்டையில் கட்டப்பட்ட வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

Karunanidhi with Matha Amithanandhamayi

அடுத்த கட்டமாக நாகூர் கீழ்ப்பட்டனச் சேரியில் கட்டப்பட்ட வீடுகளை வழங்கும் நிகழ்ச்சி நாகையில் நடந்தது. இதில் முதல்வர் கருணாநிதி, மாதாஅமிர்தானந்த மயி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அமிர்தானந்த மயி மடம் சார்பில் கட்டப்பட்டுள்ள குடியிருப்பை முதல்வர் கருணாநிதி நேரில் சென்று பார்வையிட்டார். ஒரு வீட்டுக்குள்ளும் போய்அவர் பார்த்து திருப்தி தெ>வித்தார்.

பின்னர் வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். முன்னதாக மேடையின் பின்புறம் அமைக்கப்பட்டிருந்த சிறியகுடிலில் இருந்த அமிர்தானந்த மயியை சந்தித்துப் பேசினார். அப்போது முதல்வரின் துணைவியார் ராஜாத்தி அம்மாளும் உடன் இருந்தார்.

நிகழ்ச்சியில் கருணாநிதி பேசுகையில், அம்மா அவர்கள் கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள உள்ள பறையக்கடவு என்ற கடலோர கிராமத்தில்உதித்தவர். கடலில் என்ன உதிக்கும்?. பொதுவாக முத்து உதிக்கும்.

முத்தாக அவர் நமக்குக் கிடைத்துள்ளார். நல்ல முத்து, அருள் முத்து, ஏழைகளுக்கு இரங்கும் முத்து, நோயாளிகளிடம் இரக்கம் காட்டும் முத்து,குழந்தைகளைப் பேணிக்காக்கும் முத்து, குடிசைகளை வாழ வைக்கும் முத்தாக அவர் தொண்டாற்றி வருகிறார்.

இந்தத் தொண்டால், கேரளா மட்டுமின்றி, தமிழகம், இந்தியா முழுவதும், அயல் நாடுகளிலும் நண்பர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். அவர்கள்கொடுக்கும் நன்கொடைகள் மூலம் பாராட்டத்தக்க வகையில் தொண்டாற்றி வருகிறார்.

காஷ்மீர் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். பெண்களுக்கு பல உதவிகள் செய்து வருகிறார். ஏழைக்குழந்தைகளுக்கு இல்லம், முதியோர்களுக்கு இல்லம், உயர் தர மருத்துவமனையை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாகை உள்ளிட்ட பல பகுதிகளில் ரூ. 80 கோடி மதிப்பீட்டில் நிரந்தரக் குடியிருப்புகள், மீன் பிடிவலைகள், படகுகள், பிற வாழ்வாதார உதவிகளை செய்துள்ளார்.

அம்மா அவர்களின் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்ட வீடுகள் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன. அந்த வீடுகளை தொலைவிலிருந்தபடியேநான் பார்வையிட்டு மகிழ்ந்தேன். நமக்கு ஒன்று கொடுத்தால் கூட அழகாக இருக்கும் என்று எண்ணினேன்.

பரவசம், ஆர்வத்தால் காரை விடச் சொல்லி ஒரு வீட்டை உள்ளே சென்று பார்த்தேன். வசதியாக, அழகாக உள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் இங்கேவாழப் போகிறார்கள் என்பதை எண்ணி பூரிப்பும், மகிழ்ச்சியும் அடைந்தேன்.

இங்கே அமிர்தானந்தமயி மடத்தின் சார்பாக அதன் அறங்காவலர் என்னிடம் ஒரு கடிதம் கொடுத்தார். அதில், மாதா அமிர்தானந்த மயி மடம்ஏழைகளுக்காக அமிர்த குடீரம் என்ற பெயரில் இலவச வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளது.

220 சதுர அடி பரப்பில், சிறிய அறை, தனி சமையல் அறை, குளியல் அறை மற்றும் கழிவறை வசதிகளுடன் அந்த வீடுகள் கட்டப்படுகின்றன.முதல்வர் விரும்பினால், தமிழ்நாட்டில் இலவசமாக மனை வழங்கும் பகுதிகளில் மாதா அமிர்தானந்த மயி மடம் சார்பில் இதைப் போல 500 வீடுகள்கட்டிக் கொடுக்கத் தயாராக உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

நான் தமிழில் எது வந்தாலும் அதை படிக்கும்போது புரூப் பார்ப்பது வழக்கம். அதாவது எழுத்துப் பிழை இருக்கிறதா என்று பார்ப்பேன். பிழை கூடநாம் போற்றத் தக்க வகையில் இந்தக் கடிதத்தில் அமைந்திருக்கிறது. அதாவது, தயாராக இருக்கிறோம் என்பதை தாயாராக இருக்கிறோம் என்றுஎழுதியிருக்கிறார்கள்.

ஏன் என்றால் இது மாதா மடம் அல்லவா?. அதனால்தான் தாயாராக இருக்கிறோம் என்று எழுதி இருக்கிறார்கள்.

அம்மா, நீங்கள் தாயாராக இருந்து தமிழக மக்களையும், உங்களது மக்களாக கருத வேண்டும். மடத்திற்கு வருபவர்கள் காணிக்கை அளிக்கிறார்கள்.அதை மக்களுக்கே திருப்பிக் கொடுக்கிறீர்கள். உங்களது சிரிப்பு கவர்ச்சிகரமாக இருக்கிறது.

ஏழையின் சி>ப்பில் இறைவனைக் காண்போம் என்று கூறிய அண்ணா, பெரியார் அவர்களின் லட்சியத்தை எடுத்துச் சொல்லி மகிழ்ச்சியோடும்,நன்றியோடும் இதைப் பெற்றுக் கொள்கிறோம் என்றார் கருணாநிதி.

பின்னர் ஒரு வீட்டின் சாவியை அமிர்தானந்த மயி கருணாநிதியிடம் கொடுக்க அவர் அதைப் பெற்றுக் கொண்டார்.

எல்.ஜி. சந்திப்பு:

முன்னதாக திருவாரூரில் கருணாநிதி ஓய்வெடுத்தார். அங்கு போட்டி மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.

இச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய கணேசன், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. அரசியல் பேசவில்லை. வைகோ குறித்து நான் எழுதும்புத்தகத்தில் நான்கு பாகம் எழுதி உள்ளேன். இன்னும் மீதமுள்ள நான்கு பாகம் எழுதி வருகிறேன். கருணாநிதி ஒப்புதல் பெற்று மூால்வெளியீட்டுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+