5 லட்சம் கேட்கும் சிறுவனைக் கடத்திய கும்பல்
சென்னை:சென்னையில் கடந்தப்பட்ட நகைக் கடை அதிபரின் 5 வயது மகன் விமலை விடுவிக்க ரூ. 5 லட்சம் கேட்டு கடத்தல் கும்பல் தொலைபேசி மூலம்மிரட்டியுள்ளது.
சென்னை அருகே மணலியில் நகைக் கடை வைத்திருப்பவர் தானா ராம். இவரது 5 வயது மகன் விமல் வீட்டுக்கு அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது காணாமல் போய் விட்டான்.
இதுகுறித்து மணலி போலீஸில் தானாராம் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் தனிப்படைகள் அமைத்து சிறுவனைத் தேடி வருகின்றனர். விமல்காணமல் போன அன்று அடையாளம் தெரியாத 2 பேரிடம் அவன் பேசியதாக அவனோடு விளையாடிய சிறுவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் தானா ராம் வீட்டுக்கு நேற்று காலை மர்ம போன் வந்தது. அதில் பேசியவன் விமலை நாங்கள் தான் கடத்தினோம். ரூ. 5 லட்சம்கொடுத்தால் விட்டு விடுவோம் என்று கூறி தொடர்பை துண்டித்து விட்டான்.
கடத்தல்காரர்கள் முதலில் அந்தப் பகுதியில் உள்ள சேத்தன் என்ற மார்வாடியின் செல்போன் கடைக்கு போன் செய்து தானா ராம் வீட்டு டெலிபோன்எண்ணைக் கேட்டு 2 முறை போன் செய்துள்ளனர்.
அவர் தர மறுத்துடன் தானாராம் வீட்டுக்கு சென்று உங்கள் மகனை கடத்தி விட்டதாக கூறி என்னிடம் நம்பர் கேட்டனர். நான் மறுத்து விட்டேன் எனகூறியுள்ளார்.
பின்னர் தானா ராம் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளருக்கும் அடுத்து தானா ராம் வீட்டுக்கும் போன் வந்தது. அதில் பேசியவன் ரூ. 5 லட்சம்கொண்டு வந்து மகனை மீட்டுச் செல்லுங்கள். எங்கே வருவது என்பதை பிறகு சொல்கிறோம் என்று கூறினான்.
பின்னர் மீண்டும் போன் செய்து உங்கள் மகனை கடத்தி ஆந்திராவில் வைத்துள்ளோம். கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்துக்கு பணத்துடன் வந்துநில்லுங்கள் என்று தெரிவித்தனர். அதன் படி நகைகடை அதிபரின் உறவினர்கள் மோகன், மங்கிலால் ஆகியோர் ரூ. 5 லட்சம் பணத்துடன் ரயிலில்கும்மிடிப்பூண்டி புறப்பட்டனர். அவர்களுடன் போலீசாரும் சாதாரண உடையில் சென்றனர்.
அப்போது மீண்டும் கடத்தல்காரர்கள் போன் செய்து கும்மிடிப்பூண்டியில் பாதுகாப்பு இல்லை. மீஞ்சூர் ரயில் நிலையம் வாருங்கள் என்று கூறினர்.இதனால் மீஞ்சூரில் இறங்கினர். அங்கு ரயில் நிலையத்தில் தேடிப்பார்த்த போது யாரும் இல்லை.
அப்பொது மீண்டும் அவர்கள் போன் செய்து இன்று வேண்டாம். மீண்டும் நாங்கள் சொல்லும் போது வாருங்கள் என்று கூறினர். இதனால்பணத்துடன் சென்ற உறுவினர்களும், போலீசாரும் ஏமாற்றம் அடைந்தனர்.
சிறுவன் கடத்தப்பட்டு 3 நாட்கள் ஆகியும் மீட்க முடியாததால் பெற்றோர் கவலை அடைந்துள்ளனர். பணத்துடன் சென்ற பிறகும் கடத்தல்காரர்கள்அலைய வைத்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் முதன் முதலில் கடத்தல்காரர்கள் போனில் தொடர்பு கொண்டு பேசியசேத்தன் உள்பட 7 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடத்தல்காரர்கள் இதுவரை 8 .றை போன் செய்துள்ளனர். இதில் 7 முறை ஒரு ரூபாய் காயின் பாக்ஸ் போனில் இருந்தும் ஒருமுறை செல்போனில்இருந்தும் பேசியுள்ளனர்.
சின்னமாத்தூர் என்ற இடத்திலிருந்து போன் பண்ணியுள்ளனர். காயின் பாக்ஸ் போன்கள் அனைத்தும் திருவொற்றியூர் மற்றும் மீஞ்சூர் பகுதியில்இருந்து வந்துள்ளது. எனவே கடத்தல் கடத்தல்காரர்கள் இப்பகுதியில் பதுங்கி இருக்கலாம் என கருதி போலீசார் இப்பகுதியில் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications