தைப்பூசம்: பழனியில் பக்தர்கள் குவிந்தனர்
பழனி:தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனியில் பக்தர்கள் கூட்டும் அலைமோதுகிறது.
முருகனின் ஆறுபடை வீடுகளில் 3வது படை வீடான பழனியில் ஆண்டு தோறும் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக கொண்டப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான தைப்பூச விழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றைய தினம் முதல் ஒவ்வொரு நாளும்முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றுது.
பக்தர்கள் காவடி எடுத்து பாதயாத்திரையாக கோவிலில் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். இன்று தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று இரவுமுத்துக்குமார சுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் மற்றும் வெள்ளி தேரோட்டம் நடைபெற்றது.
தைப்பூசத்தையொட்டி இன்று காலை மண்டகப்படி நடந்தது. 6 மணிக்கு தீர்த்தவாரியும் நடந்தது. தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்ச்சியானதேரோட்டம் இன்று மாலை நடக்க இருக்கிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் இருந்து லட்சகணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்துள்ளனர்.
பக்தர்களின் வசதிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளன. மேலும் மதுரையில் இருந்து பழனிக்கு சிறப்பு ரயில்விடுப்பட்டுள்ளது. தைப்பூச திருவிழாவையொட்டி பழனியல் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications