சேலம் ரயில்வே கோட்டம் கூடாது-கேரளா

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்:சேலத்தில் அமைக்கவிருக்கும் புதிய ரயில்வே கோட்டத்திற்கு கேரளா அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் ஒரு பகுதி ரயில்வே நிர்வாகம் கேரளத்தின் பாலகாடு கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. குறிப்பாக தமிழகத்தின் மேற்குபகுதியிலுள்ள ரயில் நிலையங்கள் மற்றும் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஜோலார்பேட்டை போன்ற முக்கிய ரயில் நிலையங்கள் பாலக்காடுகோட்டத்தின் கட்டுபாட்டில் இருந்து வருகின்றன.

தமிழகத்தலிருந்து சரக்குகளை அனுப்புவோர் மற்றும் பயணிகள் தங்கள் பிரச்னைகளுக்காக பாலக்காடு செல்ல வேண்டிய நிலை இருந்தது.தமிழகத்தின் கீழ் உள்ள இந்த பகுதிகளில் ரயில்வே ஊழியர்களும் பெரும்பாலும் மலையாளிகளாகவே உள்ளனர்.

மேலும் தமிழகத்துக்கான ரயில் திட்டங்களைக் கூட கேரளம் தட்டிப் பறித்து தனக்கு சுருட்டி வந்தது. கேரளத்தின் இந்த ஓவர் விவரம் காரணமாக,பாலக்காடு கோட்டத்தில் இருந்து தமிழக ரயில்வே பகுதிகளைப் பிரித்து சேலத்தில் தனி நிர்வாக அலுவலகம் (கோட்டம்) அமைக்க வேண்டும் எனபல காலமாக கோரிக்கை இருந்து வந்தது.

ஆனால், டெல்லியில் தனது வேலையைக் காட்டி தமிழகத்தின் இந்தக் கோரிக்கை நிறைவேறிவிடாமல் தொடர்ந்து தடுத்து வந்தது கேரளம். இந்நிலையில் பாமக வசம் ரயில்வேத்துறை இணையமைச்சர் பதவிகள் வந்தன. இதையடுத்து பாலக்காடு கோட்டத்தை பிரித்து சேலத்தில் தனி ரயில்வேகோட்டம் அமைக்கும் நடவடிக்கைகளில் பாமக நிறுவனர் ராமதாஸ் ஈடுபட்டார். அதில் வெற்றியும் கிடைத்துள்ளது.

சேலம் கோட்டம் இன்று முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு, பாலக்காடு கோட்டத்திவிலிருந்து 100 ஊழியர்கள் சேலத்துற்கு இடமாற்றம்செய்யப்பட்டனர்.

இந் நிலையில் சேலம் கோட்டத்துக்கு கேரள முதல்வர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதைபற்றி கேரளா முதல்வர் அச்சுதானந்தன் கூறுகையில்,

பாலக்காடு கோட்டத்தை பிரிப்பதால், கேரளாவிற்கு பெரும் இழப்பு ஏற்படும். ஆயிரக்கணக்கான ரயில்வே ஊழியர்கள் பாதிக்கப்படுவர். எனவைஇத்திட்டத்தை விைட வேண்டும். இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்மற்றும் ரயில்வே அமைச்-சர் லல்லு பிர-சாத் யா-தவ் ஆகி-யோ-ருக்குகேரளா அர-சின் சார்-பில் கடிதம் கடிதம் எழுத உள்ளேன் என்றார்.

மிக அதிகமான வருவாய் வரும் ரயில் நிலையங்களான கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஜோலார்பேட்டை போன்ற முக்கிய ரயில் நிலையங்கள்சேலம் கோட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதால், இனி பாலக்காடு கோட்டத்திற்கு வருவாய் குறையும் என்பதால் கேரளா இதற்கு எதிர்ப்பு தெரிவித்துவருகிறது.

இதி திட்டத்துக்கு கேரளா காங்-கிரஸ் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. -இத்-திட்-டத்தை கைவி-ட வேண்டும் என ரயில்வே அமைச்ச-ருக்கு கேரளாமாநில காஙகிரஸ் தலைவர் ரமேஷ் சென்னித-லாவும் கடி-தம் எழு-தியுள்ளது குறிப்-பி-டத்-தக்-க-து.

முல்லைப் பெரியாறில் தண்ணீரை தேக்கி வைக்க கூட தமிழகத்தை அனுமதிக்க மாட்டார்களாம், அதே நேரத்தில் தமிழகத்தின் வருவாய் மிக்க ரயில்நிலையங்களை அவர்களே கட்டுப்படுத்துவார்களாம். இது எந்த ஊர் நியாயம்?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+