உயிர் பெறும் ராமர் வழிபட்ட பாக். சிவன் கோவில்
இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் உள்ள, ராமர் வழிபட்ட பழமையான சிவன் கோவில் புத்துயிர் பெறுகிறது.
ராமயாணத்தில், கைகேயி தனது மகன் நாடாள வேண்டும், ராமன் 14 வருடம் வன வாசம் செல்ல வேண்டும் என் கோருகிறாள். இதைத் தட்டாதராமனும், தனது தம்பி லட்சுமணனுடன் 14 வருடங்கள் காட்டில் வாசம் புரிகிறான்.
வனவாசத்தின்போது சில காலம் கடஸ்ராஜ் என்ற இடத்தில் ராமன் தங்கியிருந்ததாக ராமாயணம் கூறுகிறது. அந்த இடம் தற்போது பாகிஸ்தானில்உள்ளது.
இங்குள்ள சிவன் கோவிலில் ராமன் வழிபட்டதாக புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த கோவில் இப்போதும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது.
இந்தக் கோவிலைப் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தான் அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்ற பாகிஸ்தான்அரசு ரூ. 6.3 கோடி நிதியை ஒதுக்கீடு செய்தது. பாகிஸ்தான் தொல்பொருள்துறை, சிவன் கோவிலை புதுப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
புதுப்பிக்கும் பணிக்கு சமீபத்தில் பாகிஸ்தான் சென்ற பாஜக முன்னாள் தலைவர் அத்வானி அடிக்கல் நாட்டி வைத்தார். தற்போது பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. வருகிற சிவராத்திரியன்று பக்தர்களுக்காக கோவில் திறக்கப்படவுள்ளது.
புதுப்பிக்கும் பணிகள் தொடர்பாகவும், கோவிலின் கட்டடம் எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தவும் 3 பேர் கொண்டபாகிஸ்தான் அரசுக் குழு இந்தியா வந்துள்ளது. இவர்கள் நேற்று அத்வானியை சந்தித்துப் பேசினர்.
அப்போது, திருப்பதி, டெல்லி வைஷ்ணவ தேவி கோவில், குஜராத் மாநிலம் அக்ஷர்தாம் கோவில்களை நேரில் சென்று பார்வையிட்டு கோவில்கட்டடக் கலை நுணுக்கங்களைத் தெரிந்து கொள்ளுமாறு அவர்களுக்கு அத்வானி ஆலோசனை கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications