பாலாறு-7ம் தேதி வைகோ போராட்டம்
வாலாஜாபாத்:பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதை எதிர்த்து வேலூரில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் 7ம் தேதிஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபாத்தில் திருமண நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற வைகோ அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், தென்மாவட்டங்களின் உயிர் நாடிப் பிரச்சினையான முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக இருந்து கோட்டை விட்டுவிட்டது.
இந்த நிலையில் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டவுள்ளது. இதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது. இது நடந்தால் வேலூர்,திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பெரும் குடிநீர்ப் பிரச்சினை உருவாகும்.
ஆந்திர அரசின் நடவடிக்கையைக் கண்டித்து வேலூரில் வருகிற 7ம் தேதி எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்வைகோ.
சென்னை மாநகராட்சி தேர்தல் குறித்த கேள்விக்கு வைகோ பதிலளிக்கையில், 155 வார்டுகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்பதே எங்களதுகோரிக்கை. இதுதொடர்பாக வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையரை மாற்றவும் கோரியுள்ளோம். இதுதொடர்பாக ஜெயலலிதாவுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்துமுடிவெடுப்போம் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications