கோவை-திருச்சி அண்ணா பல்கலை.க்கு வி.சிகள்
சென்னை:புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கோவை மற்றும் திருச்சி அண்ணா பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர்களை முதல்வர் கருணாநிதி நியமித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் உரையில், சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை 3 ஆக பிரித்து திருச்சியில் ஒன்றும்,கோவையில் ஒன்றுமாக புதிதாக 2 அண்ணா பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன.
கோவையில் அமையும் அண்ணா பல்கலைக்கழகம், கோவை அண்ணா பல்கலை என்றும், திருச்சியில் அமைவது திருச்சி அண்ணா பல்கலை என்றும் அழைக்கப்படும்என தமிழக அரசு அறிவித்தது.
தற்போது கோவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக தற்போது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் பேராசி>யர் டாக்டர்ராதாகிருஷ்ணனும்,
திருச்சி அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக, சென்னை அண்ணா பல்கலைக்கழக ராமானுஜன் கணித மையத்தின் இயக்குனர் முனைவர் ராமச்சந்திரனும்நியமிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications