அனில் அம்பானி ரூ.100 கோடி மோசடி?
சென்னை:ரூ. 100 கோடி பணத்தை மோசடி செய்த வழக்கில் ரிலையன்ஸ் அதிபர் அனில் அம்பானி உள்ளிட்ட 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்ட என்.இ.பி.சி. நிறுவன துணைத் தலைவர் ராஜ்குமார் கெம்கா உயர்நீதிமன்றத்தில் மனுஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், எங்களது நிறுவனத்தின் காற்றாலை எரிசக்திப் பிரிவை சதர்ன் விம்ஸ் நிறுவனத்திற்குவிற்க தீர்மானித்து ஒப்பந்தம் போடப்பட்டது.
இதைத் தொடர்ந்து நிறுவனத்தின் காற்றாலைகள் உள்பட அனைத்து சொத்துக்களும் சதர்ன் விம்ஸ் நிறுவனத்திடம்ஒப்படைக்கப்பட்டன. ரிலையன்ஸ் எனர்ஜி நிறுவனம் உள்ளிட்டவை தான் இந்த சதர்ன் விம்ஸ் நிறுவனத்தின்உரிமையாளர்களாக உள்ளனர்.
ஆனால் ஒப்பந்தப்படி ரூ. 100 கோடி பணத்தை சதர்ன் விம்ஸ் நிறுவனம் எங்களுக்குத் தரவில்லை.
இப்பணத்தைக் கேட்டபோது மிரட்டல் விடுத்தனர். எனவே இதில் தொடர்புடைய அனில் அம்பானி உள்ளிட்ட 19 பேர் மீதுபோலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் போலீஸார் புகாரை ஏற்க மறுக்கிறார்கள். எனவே வழக்குப் பதிவு செய்துவிசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.என்.பாஷா, மனுதாரர் கொடுத்த புகாரின் பரில் இன்ஸ்பெக்டர் ஒருவரை நியமித்துவிசாரணை நடத்த வேண்டும். குற்றத்தன்மை இருந்தால் அதுகுறித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனகாவல்துறை ஆணையருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து விரைவில் அனில் அம்பானி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications