சென்னை-பாஜக தனித்து போட்டி: திருநாவுகரசர்
புதுக்கோட்டை:சென்னை மாநகராட்சி மறு தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடும் என்று முன்னாள் அமைச்சரும், பாஜக எம்.பியுமான திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சென்னை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கு நடைபெறும் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடும்.
எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.
திமுக அரசு பதவியேற்ற 6 மாதங்களிலேயே பல மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி வருவது பாராட்டுக்குரியது. மேலும் தற்போது அறிவித்துள்ள இலவசத் திட்டங்கள் உள்ளிட்ட மற்ற மக்கள் நலத்திட்டங்களையும் முழுமையாக நிறைவேற்ற திமுக அரசு தவறக் கூடாது.
முல்லைப் பெரியாறு, காவிரி ஆகியப் பிரச்சினைகளில் அண்டை மாநிலங்களில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒருமித்து செயல்படுகின்றன. அதே நிலை தமிழகத்திலும் வர வேண்டும் என்றார்திருநாவுக்கரசர்.












Click it and Unblock the Notifications