சென்னை தேர்தல்-10 பார்வையாளர்கள் நியமனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னை மாநகராட்சி மறு தேர்தல் பார்வையாளர்களாக 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கு வருகிற 18ம் தேதி மறு தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை ரத்து செய்யக் கோரி அதிமுகதாக்கல் செய்த மனுவை நிராகரித்த உயர் நீதிமன்றம், தேர்தலை கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்களை நியமிக்கலாம் என தமிழக அரசுக்குஆலோசனை தந்தது.
இதை உத்தரவாக பிறப்பிக்கவில்லை என்றும் தலைமை நீதிபதி ஷா கூறினார்.
ஆனாலும் உடனடியாக 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பார்வையாளர்களாக அரசு நியமித்துள்ளது. இவர்களுடன் மாநில தேர்தல் ஆணையர்சந்திரசேகரன் 5ம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளார்.
அந்தக் கூட்டத்தில், தேர்தல் ஏற்பாடுகள் மற்றும் இதர பணிகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications