சென்னை: மீண்டும் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட்?
சென்னை:சென்னை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கு நடக்கவுள்ள மறு தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக இன்று இரு கட்சிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடக்கிறது.
கடந்த முறை இங்கு தேர்தல் நடந்தபோது திமுக-மார்க்சிஸ்ட் இடையே இடப் பகிர்வு தொடர்பாக உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி தனித்துப் போட்டியிட்டது.
அந்தத் தேர்தலில் பெரும் வன்முறைகள் அரங்கேறின. இதையடுத்து தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி திமுகவுக்கு எதிராக அக் கட்சி போராட்டம்நடத்தியது.
இந் நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி வரும் 18ம் தேதி மறு தேர்தல் நடக்கவுள்ளது. இதில் திமுக சார்பில் கடந்தமுறை போட்டியிட்ட அனைவருக்கும் மீண்டும்சான்ஸ் கிடைக்கும் என்று கருதப்பட்டது.
இந் நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுக கூட்டணியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது. இதனால் திமுக தனது வேட்பாளர் பட்டியலைவெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடங்களால் திமுகவினர் பலருக்கு சீட் கிடைக்காமல் போகலாம். இதனால் மீண்டும் சீட் கிடைக்கும் எனஎதிர்பார்த்து ராஜினாமா செய்த கவுன்சிலர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். யார், யாரின் இடங்கள் பறிபோகுமோ என்ற அச்சத்தில் அவர்கள் உள்ளனர்.
மேலும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பும் கூட்டணியில் கூடுதலாக சில இடங்களைக் கேட்டு வருகிறது.
திமுக தரப்புடன் இன்று இரவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இதன் பிறகே திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பட்டியல்வெளியாகும்.
22 காங்கிரஸார் வேட்பு மனு:இந் நிலையில் மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை கட்சித் தலைமை இன்னும் வெளியிடாத நிலையில் ராஜினாமா செய்த 22 காங்கிரஸ்கவுன்சிலர்கள் மீண்டும் போட்டியிட மனு தாக்கல் செய்துவிட்டனர்.
காங்கிரஸ் சார்பில் மொத்தம் 25 பேர் கவுன்சிலர்களாக இருந்தனர். இவர்கள் அனைவருக்கும் மீண்டும் சீட் தரப்படுமா இல்லையா என்று தெரியவில்லை.கோஷ்டிகளுடன் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.
இந் நிலையில் ராஜினாமா செய்தவர்களில் 22 பேர் கட்சித் தலைமையிடம் கேட்காமலேயே மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளனர். மிச்சமுள்ள 3 பேர் மட்டும் ஏன்வேட்பு மனு தாக்கல் செய்யவில்லையோ, தெரியவில்லை.
இன்று தேமுதிக பட்டியல்:
இந் நிலையில் தேமுதிக சார்பில் 100 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்த அக் கட்சியின் தலைவர் முடிவு செய்துள்ளார். வேட்பாளர் பட்டியல்இன்று வெளியாகவுள்ளது.
10 பார்வையாளர்கள் நியமனம்:சென்னை மாநகராட்சி மறு தேர்தல் பார்வையாளர்களாக 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சி மறு தேர்தலை ரத்து செய்யக் கோரி அதிமுக தாக்கல் செய்த மனுவை நிராகரித்த உயர் நீதிமன்றம், தேர்தலை கண்காணிக்கசிறப்பு பார்வையாளர்களை நியமிக்கலாம் என தமிழக அரசுக்கு ஆலோசனை தந்தது.
இதை உத்தரவாக பிறப்பிக்கவில்லை என்றும் தலைமை நீதிபதி ஷா கூறினார்.
ஆனாலும் உடனடியாக 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பார்வையாளர்களாக அரசு நியமித்துள்ளது. இவர்களுடன் மாநில தேர்தல் ஆணையர்சந்திரசேகரன் 5ம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளார்.
அந்தக் கூட்டத்தில், தேர்தல் ஏற்பாடுகள் மற்றும் இதர பணிகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
பாஜக தனித்து போட்டி: திருநாவுகரசர்
இதற்கிடையே சென்னை மாநகராட்சி மறு தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடும் என்று முன்னாள் அமைச்சரும், பாஜக எம்.பியுமான திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சென்னை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கு நடைபெறும் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடும்.எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.
திமுக அரசு பதவியேற்ற 6 மாதங்களிலேயே பல மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி வருவது பாராட்டுக்குரியது. மேலும் தற்போது அறிவித்துள்ள இலவசத் திட்டங்கள் உள்ளிட்ட மற்றமக்கள் நலத் திட்டங்களையும் முழுமையாக நிறைவேற்ற திமுக அரசு தவறக் கூடாது.
முல்லைப் பெரியாறு, காவிரி ஆகியப் பிரச்சினைகளில் அண்டை மாநிலங்களில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒருமித்து செயல்படுகின்றன. அதே நிலை தமிழகத்திலும் வர வேண்டும் என்றார் திருநாவுக்கரசர்.












Click it and Unblock the Notifications