மலையாள அதிகாரிகள் உள்ளடி-வேலு விசாரணை

Subscribe to Oneindia Tamil

சேலம்:சேலம் ரயில்வே கோட்டம் அமைய இடையூறாக இருக்கும் தெற்கு ரயில்வே உயர் அதிகாரிகள் யார் என்பதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இடையூறாக இருப்பவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீதுநடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு கூறியுள்ளார்.

தமிழகத்தின் மேற்குப் பகுதி ரயில்வே நிர்வாகம் தற்போது கேரளாவின் பாலக்காடு கோட்டத்தால்நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இதனால் கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட பல முக்கிய வணிக நகரங்கள்கேரளாவின் பிடியில் சிக்கியுள்ளன.

இங்கு மலையாளிகளின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. பல காலமாக கோவை ரயில் நிலையத்தில் ரயில்முன்பதிவு பாரங்களில் தமிழ் இல்லாமல் மலாையளம் மட்டுமே இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்தஅளவுக்கு தமிழர்களின் தலையில் மலையாளிகள் மிளகாய் அறைத்தனர். பெரும் போராட்டத்திற்குப் பின்னரேஅது மாறி தமிழ் இடம் பிடித்தது.

இந் நிலையில் கேரளாவின் பாலக்காடு கோட்டத்தை பிரித்து சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு தனிரயில்வே கோட்டம் அமைக்க ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா தமிழ்ப் புத்தாண்டான ஏப்ரல் 14ம் தேதி நடைபெறவுள்ளது. ஆனால் தமிழகப்பகுதிகளைப் பிரித்து தனிக் கோட்டம் அமைக்கப்படுவதைக் கண்டு எரிச்சல் அடைந்துள்ள கேரளா, அதைத்தடுக்கும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங், ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோருக்கு கேரள முதல்வர்அச்சுதானந்தன் இதுதொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். டெல்லியில் கேரள லாபியும் சேலம் கோட்டத்தைத்தடுக்க பிரம்மப் பிரயத்தனம் செய்து வருகிறது.

இந் நிலையில், சேலம் கோட்டம் அமைவதை எதிர்த்து பாலக்காட்டில் போராட்டம் நடந்து வருகிறது. இதைதெற்கு ரயில்வேயின் உயர் அதிகாரிகள் சிலர்தான் தூண்டி விட்டு வருவதாக கூறப்படுகிறது. சென்னையில்உள்ள தெற்கு ரயில்வே தலைமையகத்தில் உள்ள 5 கேரள அதிகாரிகள்தான் இதில் முழு மூச்சாகஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சேலம் கோட்டம் அமைந்தால், தமிழகம் நலன் பெறும், கேரளாவுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் எனஇவர்கள்தான் தவறான தகவல்களை கேரளாவில் உள்ள ரயில்வே துறையினர், அரசியல் கட்சிகளிடையேபரப்பி வருகிறார்களாம்.

தமிழகத்தில் இருந்து கொண்டே கேரள அதிகாரிகள் செய்யும் இந்த உள்ளடி வேலை குறித்து அமைச்சர்வேலுவின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து சென்னையிலிருந்தபடி தமிழகத்திற்கு எதிராக போராட்டத்தைத் தூண்டி விடுவது யார் என்பதுகுறித்து அறிய விசாரணைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

இந் நிலையில் சேலம் கோட்டத்திற்கு எதிராக கேரளாவின் முட்டுக்கட்டைகள், தொல்லைகள் தொடருமானால்,வணிகர் சங்கங்களும் போராட்டத்தில் குதிக்கும் என்று சேலம் அனைத்து வணிகர் சங்க செயலாளர் ஜெயசீலன்எச்சரித்துள்ளார்.

கேரள அரசின் இந்த கொடுமையான தடுப்பு முயற்சிகளைக் கண்டித்து சேலத்தில் நேற்று பாமக சார்பில்ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் பேசியவர்கள், முல்லைப் பெரியாறு, ஆழியாறு என தமிழகத்தின் உயிர் மற்றும்உரிமை சம்பந்தப்பட்ட விஷயங்களில் தொடர்ந்து அநியாயமாக, அக்கிரமாக நடந்து வருகிறது கேரளா.

இப்போது சேலத்தில் ரயில்வே கோட்டம் அமைப்பதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால் இதை நாங்கள்சும்மா விட மாட்டோம். தமிழகம் முழுவதும் கேரளாவுக்கு எதிராக பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்துவோம்.உணவு உள்ளிட்ட ஒரு பொருளும் கேரளாவுக்கு செல்லாமல் தடுத்துப் போராட்டம் நடத்துவோம்.

உயிரைக் கொடுத்தாவது சேலம் கோட்டத்தை அமைப்போம் என்று ஆவேசமாக பேசினர்.

இந்த நிலையில் கேரளாவின் எதிர்ப்பையும், இழப்பு ஏற்படும் என்ற கூப்பாட்டையும் நிராகரித்துள்ளார்ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு.

ராணிப்பேட்டையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாட்டில் மொத்தம் 67 ரயில்வே கோட்டங்கள்உள்ளன.

இந்த ரயில்வே கோட்டங்களின் அதிகபட்ச ஆளுமை எல்லை 540 கிலோமீட்டர் தொலைவு ஆகும். ஆனால்பாலக்காடு கோட்டம்தான் இந்தியாவிலேயே அதிகமாக 544 கிலோமீட்டர் தொலைவை ஆளுமைஎல்லையாகக் கொண்டுள்ளது.

கிழக்கு ரயில்வேயில் மொகல்சராய் கோட்டத்தின் எல்லை 317 கிலோமீட்டர் ஆகும். தென் கிழக்குரயில்வேயில் ரெய்ப்பூர் 355 கிலோமீட்டர் தூரம்தான். பூனே கோட்டம் 506 கிலோமீட்டர் தூரம்தான். மால்டாகோட்டம் 438 கிலோமீட்டர்தான். ராஞ்சி கோட்டம் 442 கிலோமீட்டர் தான். இதை விட சிறிய கோட்டங்களும்உள்ளன.

பாலக்காடு கோட்டத்திலிருந்து சேலம் கோட்டத்தை உருவாக்குவதால் அவர்களுக்கு ஒரு இழப்பும் கிடையாது.வருமானத்திலோ, ஆளுமை எல்கையிலோ அவர்களுக்கு ஒரு பாதிப்பும் கிடையாது.

பிரிக்கப்படாத பாலக்கோடு கோட்டத்தின் ஆண்டு வருவாய் ரூ. 456 கோடியாக இருந்தது. இனி அது ரூ. 265கோடியாக மாறும். சேலம் கோட்டத்திற்கு ரூ. 191 கோடிதான் கிடைக்கும்.

மேலும், வாலையார், மதுக்கரை ஆகிய இடங்களிலிருந்து சிமென்ட் ஏற்றிச் செல்வதன் மூலமும்,மங்களூ>லிருந்து எண்ணை கொண்டு செல்வதன் மூலமும் ரூ. 100 கோடி கிடைக்கும். அதில் பாலக்காடுகோட்டத்திற்கு ரூ. 80 கோடியும், சேலம் கோட்டத்திற்கு 20 கோடியும் கிடைக்கும். எனவே வருமான ரீதியாகபாலக்காடு கோட்டத்திற்கு ஒரு இழப்பும் கிடையாது.

பாலக்காடு கோட்டத்திலிருந்து ஜோலார்ப்பேட்டைக்கு 319 கிலோமீட்டர் தொலைவு உள்ளது. திருச்சிக்கு 276கிலோமீட்டர் தூரம் உள்ளது. திண்டுக்கல்லுக்கு 275 கிலோமீட்டர் ஆகும்.

இப்படி அதிக தூரத்தைதக் கொண்டதாக இருப்பதால், ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதிலும், மக்கள்குறைகளைக் கேட்பதற்கும் பெரும் சிரமமமாக உள்ளது.

கோட்டங்களைப் பிரிப்பதன் மூலம் மக்கள் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய முடியும். மக்களுக்கானதிட்டங்களை, ஆய்வுப் பணிகளை விரைந்து மேற்கொள்ள முடியும் என்றார் வேலு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+