சென்னையில் இன்னொரு சிறுவன் கடத்தல்??!!
சென்னை:சென்னை மணலியில் கடத்தப்பட்ட 5 வயது சிறுவன் பத்திரமாக திரும்பியுள்ள நிலையில் திருவேற்காடுஅருகே இன்னொரு 5 வயது சிறுவன் கடத்தப்பட்டதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு சிறுவன் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டான். இந்த சம்பவம்தமிழகத்தையே உலுக்கியது.
இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு மணலி பகுதியில் 5 வயது சிறுவன் கடத்தப்பட்டு 3 நாட்களுக்குப்பிறகு கால் கட்டப்பட்ட நிலையில் கால்வாயில் போடப்பட்டு மீட்கப்பட்டான். அவனைக் கடத்திய வர்கள் 5லட்சம் தருமாறு மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் திருவேற்காடு அருகே இன்னொரு 5 வயது சிறுவன் கடத்தப்பட்டதாக அவனது தந்தை புகார்கொடுத்துள்ளார். இதனால் சென்னை போலீஸார் மீண்டும் பரபரப்படைந்துள்ளனர்.
நெற்குன்றம் செந்தமிழ் நகரைச் சேர்ந்தவர் முருகன். கூலித் தொழிலாளியான இவரது மகன் சிவா (வயது 5),எல்.கே.ஜி. படித்து வருகிறான்.
நேற்று மாலை பள்ளியிலிருந்து வீடு திரும்பிய சிவா, வீட்டின் முன்சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தான். ஆனால் நீண்ட நேரமாகியும் அவன் வீட்டுக்குள் வரவில்லை.
இதனால் முருகனும், மனைவி காயத்ரியும் வெளியே வந்து பார்த்தபோது குழந்தையைக் காணவில்லை. பலஇடங்களிலும் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியாததால், மதுரவாயல் காவல் நிலையத்தில் முருகன்புகார்கொடுத்தார். யாரேனும் தனது குழந்தையைக் கடத்தியிருக்கலாம் என தனது புகா>ல் அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து சிறுவன் கடத்தப்பட்டானா அல்லது வழி தவறி எங்காவது போய் விட்டானா என்று போலீஸார்விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications