புலிகள்-இலங்கை அரசு மீண்டும் பேச்சு?
கொழும்பு:விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே தடைபட்டுள்ள அமைதிப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
நார்வே குழுவினரின் முயற்சியால் இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடங்கிப் போயுள்ளன.ஜெனீவாவில் நடந்த கடைசிப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
இதைத் தொடர்ந்து தமிழர் பகுதிகளில் இலங்கை முப்படைகளும் தாக்குதலை தீவிரப்படுத்தின. இதனால் லட்சக்கணக்கான தமிழர்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந் நிலையில் இரு தரப்புக்கும் இடையே மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க நார்வே குழு முயற்சிகளை எடுத்துள்ளது.
இதற்காக கொழும்பு வந்துள்ள நார்வே தூதர் ஹான்ஸ் பிரட்ஸ்கர் கிளிநொச்சிக்குச் சென்று விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச் செல்வனைசந்தித்துப் பேசினார். தாக்குதல்களை நிறுத்தி விட்டு மீண்டும் பேச்ச்சு வார்த்தை நடத்துவது குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டது.
ஏற்கனவே போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுத் தலைவர் லார்ஸ் ஜோகன் சோல்வ்பர்க், விடுதலைப் புலிகளின் அமைதிச் செயலக தலைவர் சீவரத்தினம் பூலித்தேவனை சந்தித்துப் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனையும் நார்வே தூதர் சந்தித்துப் பேசவுள்ளார்.
இதையடுத்து இலங்கை அரசுப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நார்வே தூதர் முடிவு செய்துள்ளார். ஏற்கனவே நன்கொடையாளர் நாடுகள் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளன. இதனால் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
பேச்சுக்குத் தயார் -இலங்கை அரசு:
இதற்கிடையே, விடுதைலப் புலிகளுடன் தீவிரப் பேச்சுவார்த்தைக்கு இலங்கை அரசு தயாராக இருப்பதாக அரசு செய்தித் தொடர்பாளர் கெகேலிய ரம்புகவெல்லாகூறியுள்ளார்.
அவர் கூறுகையில், புலிகளுடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம் என்றார்.
தமிழர் உரிமைகள்-வாஜ்பாய் கோரிக்கை:
தமிழர்களின் வாழ்வுரிமைகளைப் பாதுகாக்க இலங்கை அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழர்களைப் புறக்கணித்து விட்டு அமைதித் தீர்வுகாண முடியாது என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார்.
இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே டெல்லி வந்துள்ளார். அவருடன் ஐந்து பேர் கொண்ட குழுவும் உடன் வந்துள்ளது.
ரணில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை சந்தித்துப் பேசினார். ரணிலிடம் பேசிய வாஜ்பாய், தமிழர்களின் வாழ்வுரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அப்போதுதான்இலங்கையின் இறையாண்மைக்குப் பாதிப்பு ஏற்படாது.
தமிழ் மக்களின் கவலைகள் முழுமையாக பரிசீலிக்கப்பட வேண்டும். தமிழர்களைப் புறக்கணித்து விட்டு இலங்கையில் அமைதியை நிலை நாட்ட நினைக்கும்முயற்சிகள் வெற்றி பெறாது என்றார் வாஜ்பாய்.
இந்த சந்திப்பின்போது அத்வானி, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், முன்னாள் வெளியுறவு அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் உடன் இருந்தனர்.
இலங்கையின் தற்போதைய நிலை குறித்து வாஜ்பாய் உள்ளிட்ட பாஜக தலைவர்களிடம் ரணில் விவரித்தார். தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சியில்இருந்தபோது இலங்கைப் பிரச்சினையில் தீவிர கவனம் செலுத்தியதற்கு ரணில் அப்போது பாராட்டும் தெரிவித்தார்.
கண்ணிவெடிக்கு ராணுவ வீரர் பலி:
இந்த நிலையில் வவுனியாவில் கண்ணி வெடியில் சிக்கி ஒரு ராணுவ வீரர் உயி>ழந்தார்.
வவுனியாவில் ராணுவ வீரர்கள் ரோந்து செல்லும் பாதையில் இந்த கண்ணி வெடி வைக்கப்பட்டிருந்தது.
சில நாட்களுக்கு முன் மட்டக்களப்பில் ராணுவ வீரர்கள் வந்த வாகனம் கண்ணி வெடியில் சிக்கி 12 வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications