பகுபலி சிலைக்கு இன்று மகா மஷ்டாபிஷேகம்!
தர்மஸ்தலா:கர்நாடக மாநிலம் ரத்னகிரி மலையில், ஒரே கல்லில் செய்யப்பட்ட 39 அடி உயர பகுபலி சிலைக்கு மகா மஸ்டாபிஷேகம் இன்றுநடக்கிறது.
மகா மஸ்தகாபிஷேகம் நடைபெறுவதையடுத்து, ரத்தினகிரி விழாக் கோலம் பூண்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும்இருந்து கோவிலுக்கு வரும் பக்தர்களை வரவேற்க அலங்கார விளக்குகள், வளைவுகள் மற்றும் தோரணங்கள் நகர் முழுவதும்காட்சியளிக்கின்றன.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா மஸ்டாபிஷேகம் நடத்தப்படுகிறது. இதற்கு முன் 1982, 1995ல் நடந்தது. தற்போது 3வதுமுறையாக நடக்கிறது.
இன்று நடைபெறுகின்ற மகா மஸ்டாபிஷேகத்திற்கு முன்னதாக தர்மஸ்தாலா தர்ம கர்த்தா வீரேந்திர ஹெக்டே குடும்பத்தினர்சார்பில் பகுபலி சிலைக்கு 504 கலச அபிஷேகம் நடைபெற்றது.
புனித நீர், இளநீர், குங்குமம், மஞ்சள், காஷாயா எனப்படும் மூலிகை கலவை, கரும்புச் சாறு, அ>ரி மாவு, சந்தனம் போன்றஅஷ்டகந்தா எனப்படும் 8 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன.
காலையில் மகா மங்கலாரத்தி மற்றும் சிலை மீது பூக்கள் தூவுதலுடன் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக, 102 வர்த்தமான முனிமஹாராஜா தலைமையில் சிலைக்கு பின்னால் மிகப்பெரிய இரும்பு ஏணிகள் அமைக்கப்பட்டிருந்தன.
விழாவை முன்னிட்டு, கடந்த நான்கு நாட்களாக பல்வேறு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. பகவான் சந்திர நாத் பல்வேறுஆன்மீக சொற்பொழிவு நடத்தி வருகிறார்.
நிகழ்ச்சிகள் அமைதியாக நடைபெற மலை மீதும், கோவிலைச் சுற்றியும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. ஏராளமனபோலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications