பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை தந்த இன்ஸ்பெக்டர்!
சென்னை:காவல் நிலைத்தில் பணியாற்றும் திருமணமான பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை தந்து வந்த இன்ஸ்பெக்டரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை சேலையூர் காவல் நிலையத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றுபவர் சுப்ரியா. இவரது தந்தை காவல் துறையில் பணியாற்றியபோது இறந்ததால்கருணை அடிப்படையில் சுப்ரியாவுக்கு வேலை தரப்பட்டது.
திருமணமான சுப்ரியாவுக்கு அதே காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக உள்ள செல்வகுமார் செக்ஸ் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இது குறித்து சென்னை போலீஸ் கமிஷ்னர் லத்திகா சரணை சந்தித்து சுப்ரியா கண்ணீருடன் புகார் தந்தார். அதில்,
திருமணமாகி கணவர், குழந்தையுடன் வசிக்கும் எனக்கு இன்ஸ்பெக்டர் செல்வகுமார் செக்ஸ் தொல்லை தந்து வருகிறார். செல்போனில் ஆபாசமாக எஸ்எம்எஸ்அனுப்புவது, நேரில் வந்து ஆபாசமாக பேசுவது என ஆரம்பித்து இப்போது எல்லை மீறி என்னை தொல்லைப்படுத்தி வருகிறார்.
எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
புகாரைப் பார்த்தவுடன் கடுப்பான லத்திகா சரண், இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தி செல்வகுமார் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்திய குற்றப் பிரிவுபோலீஸாருக்கும் சைபர் கிரைம் போலீசாருக்கும் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து முதல் கட்ட விசாரணையை துரிதமாக நடத்தினர் போலீசார். அதில் செல்வகுமார் செக்ஸ் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து அவர் மீதுபெண்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அவர் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது.
இது குறித்து லத்திகா சரண் கூறுகையில், செல்வகுமார் தவறு செய்தது உறுதியானால் அவர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுப்பேன். துறைரீதியாகவும்நடவடிக்கை ஆரம்பித்துவிட்டது. அவரை சஸ்பெண்ட் செய்ய தென் சென்னை துணை கமிஷ்னர் துரைராஜுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
காவல்துறையில் இது போன்ற செயல்கள் ஜீரணிக்க முடியாதவை, அனுமதிக்க முடியாதவை என்றார்.












Click it and Unblock the Notifications