மெக்-கா மசூ-தியில் துப்பாக்கியுடன் ஊடுறுவிய நபர்
ரியாத்:முஸ்-லீம்-க-ளின் புனித நகரமான மெக்-காவில் உள்ள பெரிய மசூதிக்குள் துப்பாக்கிகளுடன் நுழைய முயன்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.
மெக்கா நகரில் உள்ள பெரிய மசூதிக்குள் ஒரு நபர் சந்தேகத்திற்கிடமான வகையில் நுழைய முயன்றார். அவரைக் கவனித்த பாதுகாப்புப்படையினர் அந்த நபரை நிறுத்தி சோதனையிட்டனர்.
அப்போது அவர் தனது உடைக்குள் ரிவால்-வர், இயந்திரத் துப்பாக்கி ஆகியவற்றை மறைத்து வைத்திருந்தார். இதையடுத்து அந்த நபரைக் கைதுசெய்தனர்.
மேலும் மனித வெடிகுண்டு போலவும் சிலவற்றை தனது உடலில் செட்டப் செய்து வைத்திருந்தார். ஆனால் அவை போலியான குண்டுகள் எனத்தெரிய வந்தது.
இதையடுத்து அந்த நபரைக் கைது செய்த போலீஸார் அவர் யார், எந்த நாட்டைச் சேர்ந்தவர், எதற்காக ஆயுதங்களுடன் வந்தார் என்பது குறித்துவிசாரித்து வருகின்றனர்.
அல் கொய்தா அமைப்புக்கு எதிராக செயல்பட்டு வரும் சவூதி அரேபிய அரசைக் கவிழ்க்கவும், கலவரத்தைத் தூண்டி விடவும் அல் கொய்தாஅமைப்பு கடந்த 2003ம் ஆண்டு முதலே தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
ஏற்கனவே இராக், லெபனானில் அதிக>த்து வரும் சன்னி-ஷியா முஸ்லீம் இன மோதல், சவூதிக்கும் பரவக் கூடும் என்ற அச்சம் உள்ளது. இந்தநிலையில் தற்போது மெக்கா பெரிய மசூதிக்குள் ஆயுதங்களுடன் ஒருவர் நுழைந்துள்ளது பரபரப்பை ஏற்பபடுத்தியுள்ளது.
கடந்த 1979ம் ஆண்டும் இதேபோல பெரிய மசூதிக்குள் தீவிரவாதிகள் புகுந்தனர். 2 வார போராட்டத்துக்குப் பின்னர் அவர்களை பாதுகாப்புப்படையினர் கைது செய்தனர் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications