தஸ்லீமா நஸ்ரீன் மீது சென்னை போலீஸில் புகார்
சென்னை:முஸ்லீம்கள் குறித்து மனம் புண்படும்படியாக எழுதியுள்ள வங்கதேச எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரீன் மீதுநடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல்துறை ஆணையர் லத்திகா சரணிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தைச் சேர்ந்த புரட்சிகர பெண் எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரீன். லஜ்ஜா என்ற பிரச்சனைக்குரிய புத்தகம்எழுதிய இவரது உயிருக்கு மிரட்டல் ஏற்பட்டதால், இவர் அந்நாட்டிலிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம்புகுந்துள்ளார்.
அவர் மீது தமிழ்நாடு முஸ்லீம் மக்கள் கட்சியின் தலைவர் எஸ்.எம்.பாஷா சென்னை காவல்துறை ஆணையர்லத்திகா சரணிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார்.
அதில், எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரீன், சமீபத்தில் ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றில் முஸ்லீம்களின் மனம்புண்படும்படியான கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். எனவே அவர்மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
தஸ்லீமாவுக்கு கடந்த வாரம் தான் 6 மாத விசா நீடிப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவர் டெல்லியிலும்கொல்கத்தாவிலும் மாறி மாறி வசித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications