கலாம்: தாக்கரேவுக்கு வைகோ கண்டனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:உள்நோக்கம் கற்பித்து குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை சிவசேனா தலைவர் பால் தாக்கரே விமர்சித்துள்ளது கடும் கண்டனத்துக்குரியது என்றுமதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உலகப் புகழ் மிக்க அறிவியல் மேதையும், மனிதாபிமானமாணிக்கபதியும் ஆவார்.
ஒவ்வொரு இந்தியனும், ஒவ்வொரு தமிழனும் பெருமைப்படத்தக்க வகையில், தன் அறிவாற்றலால், தொலை நோக்கான நடவடிக்கைகளால்நாட்டுக்கு சேவை செய்து புகழால் இமயமாக உயர்ந்தவர் ஆவார்.
மரண தண்டனை குறித்து எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவும் மத்திய அரசின் முடிவாகும். இந்நிலையில் உள்நோக்கம் கற்பித்து நமது குடியரசுத்தலைவரை சிவசேனா இயக்கத்தின் நிறுவனர் பால் தாக்கரே விமர்சித்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும் என்று கூறியுள்ளார் வைகோ.












Click it and Unblock the Notifications