கொலைகள் செய்யவில்லை-சாமியார் மறுப்பு
சென்னை:சென்னை அருகே உள்ள சோழவரத்தில் சர்ச்சையில் சிக்கியுள்ள ராமகிருஷ்ண ஆத்மாலய ஆசிரமத்தில் இன்று வருவாய் கோட்டாட்சியர்விசாரணை நடத்தினார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சோழவரம்-கம்மார்பாளையம் சாலையில், ராமகிருஷ்ண ஆத்மாலய ஆசிரமம் உள்ளது. கிட்டத்தட்ட21 வருடங்களாக இயங்கி வரும் இந்த ஆசிரமத்தை சுவாமி அமுதானந்த தவயோகி நிர்வகித்து வருகிறார்.
இந்த ஆசிரமத்திற்குள் 4 பெண்கள் உள்பட 10 பேர் மர்மமாக இறந்துள்ளதாகவும், அவர்கள் ஆசிரமத்திலேயே புதைக்கப்பட்டிருப்பதாக சர்ச்சைஎழுந்துள்ளது. இதுதொடர்பாக சோழவரம் பஞ்சாயத்துத் தலைவர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
இந்த ஆசிரமத்தில் முதியோர் இல்லம், ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் ஆகியவை உள்ளன. மொத்தம் 225 பேர் தங்கியுள்ளனர். இங்கு அடிக்கடிகாளி பூஜை நடத்தப்படும். இதில் கலந்து கொண்டால் நோய் தீரும் என்ற நம்பிக்கை இப்பகுதியினருக்கு இருப்பதால் அதிக அளவில் மக்கள்வருவது வழக்கம்.
பூஜைகள் நடத்தும்போது ஆசிரமத்தைச் சேர்ந்த இளம் பெண்களை மட்டும் அருகில் வைத்துக் கொள்வார் சாமியார் என்றும், அவர்கள்பாலியல்ரீதியாக கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் புகார் கூறப்பட்டது.
அந்தப் பெண்கள் பாலியல் நோய்கள் தாக்கி அவர்கள் இறந்திருக்கலாம் அல்லது கொல்லப்பட்டிருக்கலாம் என சோழவரம் பஞ்சாயத்துத் தலைவர்போலீஸில் கொடுத்துள்ள புகாரில் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
இந்த சர்ச்சையைத் தொடர்ந்து திருவள்ளூர் எஸ்.பி. பழனிச்சாமி தலைமையில் போலீஸார் நேற்று அதிரடி விசாரணை நடத்தினர். மாலை 4 மணிமுதல் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடந்தது.
இதில், 6 பேர் இயற்கையான நோயாலும், 4 பேர் வயோதிகம் காரணமாகவும் இறந்ததாக சாமியார் கூறியுள்ளார். அவர்களின் உடல்களைஉறவினர்கள் முன்னிலையில்தான் புதைத்தோம் என்றும் அவர் தெ>வித்துள்ளார்.
இந் நிலையில் இன்று பொன்னேரி டிஆர்ஓ சங்கீதா ஆசிரமத்திற்குச் சென்று விசாரணை நடத்தினார். சாமியாரிடமும், அங்குதங்கியுள்ளவர்களிடமும், இளம் பெண்களிடமும் அவர் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.
இந்த விசாரணையின்போது, தான் யாரையும் கொன்று புதைக்கவில்லை என்று சாமியார் மறுத்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications