இந்திய அணியில் மீண்டும் ஷேவாக்
மும்பை:இலங்கை அணிக்கு எதிரான முதல் இரு ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் மீண்டும் வீரேந்திரஷேவாக் சேர்க்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. இரு அணிகளும் 4 போட்டிகளில் விளையாடவுள்ளன. முதல்போட்டி 8ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது.
இதற்கான இந்திய அணியை தேர்வு செய்யும் கூட்டம் இன்று குழுத் தலைவர் வெங்சர்க்கார் தலைமையில்மும்பையில் நடந்தது. முதல் இரு போட்டிகளுக்கான அணி தேர்வு செய்யப்பட்டது.
வீரர்கள் விவரம்:
ராகுல் டிராவிட் (கேப்டன்), சச்சின் டெண்டுல்கர், செளரவ் கங்குலி, ராபின் உத்தப்பா, வீரேந்திர ஷேவாக்,யுவராஜ் சிங், தோணி, அஜீத் அகர்கர், ஜாகிர் கான், அணில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், முனாப் படேல், திணேஷ்கார்த்திக், ஸ்ரீசாந்த், இர்பான் பதான்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் நீக்கப்பட்டிருந்த ஷேவாக் மீண்டும் அணிக்குத்திரும்பியுள்ளார். இதேபோல காயம் காரணமாக விளையாடாமல் இருந்த முனாப் படேலும் மீண்டும்வந்துள்ளார்.
சுரேஷ் ரெய்னா, கவுதம் காம்பீர், ரொமேஷ் பவார் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இந்த அணி கொல்கத்தாமற்றும் ராஜ்கோட் போட்டிகளுக்கு மட்டுமே என்று வெங் சர்க்கார் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் லைவ்: அவசரச் சட்டம் பிரகடனம்
இதற்கிடையே இந்தியா பங்கேற்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை தூர்தர்ஷனுக்கும் வழங்க வகைசெய்யும் அவசரச் சட்டத்தை குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பிரகடனப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் இந்தியாவில் நடந்த இந்திய, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஒரு நாள்கிரிக்கெட் போட்டிகளை தூர்தர்சனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யும் உரிமையை வழங்க தனியார் டிவியானநியோ ஸ்போர்ட்ஸ் மறுத்து விட்டது.
போட்டி தொடங்கிய 7 நிமிடங்கள் கழித்தே ஒவ்வொரு போட்டியும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனால்ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.
இதையடுத்து இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்ட இந்தியா பங்கேற்கும் அனைத்துப் போட்டிகளையும்தூர்தர்ஷனிலும் நேரடியாக ஒளிபரப்ப, கண்டிப்பாக சிக்னல் தர வகை செய்யும் விதத்தில் அவசரச் சட்டம்பிறப்பிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
அதன்படி இந்த அவசரச் சட்டம் குறித்து குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து நேற்றுஇரவு குடியரசுத் தலைவர் இந்த அவசரச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தினார்.
இதைத் தொடர்ந்து, இந்தியா பங்கேற்கும் சர்வதேச ஒரு நாள் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பும்உ>மையைப் பெறும் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள், அவற்றை தூர்தர்ஷனிலும், ரேடியோவிலும்நேரடியாக ஒளி, ஒலிபரப்ப அனுமதிக்க வேண்டும்.
அரசின் இந்த முடிவால், விரைவில் தொடங்கவுள்ள இந்திய, இலங்கை தொடரை நேரடியாக ஒளிபரப்புசெய்யும் உரிமையைப் பெற்று தனியார் டிவி நிறுவனம் வழக்கு தொடரப் போவதாக அறிவித்துள்ளது.
இதையடுத்து மத்திய அரசு தனது முடிவில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. அதன்படி தனியார்தொலைக்காட்சி நிறுவனங்கள் தரும் சிக்னல் மூலம் இந்தியாவுக்குள் மட்டுமே போட்டிகளைப் பார்க்கும் படிகவனம் எடுத்துக் கொள்ளப்படும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications