மார்ச் 9ல் இன்சாட் 4பி ஏவப்படுகிறது!
பெங்களூரு:இந்தியாவின் தொலைத் தொடர்பு செயற்கைக் கோளான இன்சாட் 4பி, பிரெஞ்சு கயானாவிலிருந்து மார்ச் 9ம் தேதி விண்ணில்செலுத்தப்படவுள்ளது.
இன்சாட் 4பி, இந்திய தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் வரிசையில், 4வது தலைமுறை செயற்கைக் கொளாகும். 4ஏ செயற்கைக் கோளைத்தொடர்ந்து இது 2வது செயற்கைக் கோளாகும்.
இந்த செயற்கைக் கோளில் 12 கே.யு. பாண்ட் மற்றும் 12 சி பாண்ட் டிரான்ஸ்பாணட்ர்கள் உள்ளன. கடந்த ஆண்டே இந்த செயற்கைக் கோள்செலுத்தப்படுவதாக இருந்தது. பின்னர் இந்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இன்சாட் செயற்கைக் கோள்களில் இதுவரை மொத்தம் 7 விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.
பிரான்ஸின் பிரெஞ்சு கயானாவில் உள்ள கொரு விண்வெளி ஏவுதளத்திலிருந்து இன்சாட் 4 பி விண்ணில் செலுத்தப்படவுள்ளது. ஐரோப்பாவின்ஏரியான் ராக்கெட் இன்சாட்டை விண்ணில் செலுத்தும். இதற்காக இன்சாட் 4பி பிரெஞ்சு கயானாவுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
ஜனவ> 31ம் தேதி கேயான் அருகே உள்ள ரோசம்பியூ சர்வதேச விமான நிலையத்தை இன்சாட் 4பி அடைந்தது. அதன் பின்னர் கொருவிண்வெளி தளத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. தற்போது ஏரியான் 5 ராக்கெட்டில் செயற்கைக் கோளை பொருத்தும் பணி நடந்து வருகிறது.
இன்சாட் 4 பியுடன், இங்கிலாந்தின் ஸ்கைநெட் 5ஏ ராணுவ செயற்கைக் கோளும் விண்ணில் ஏவப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications