நாளை அதிமுக பொதுக்குழு-அவைத் தலைவர் தேர்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னை அருகே வானகரத்தில் நாளை அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், புதிய அவைத் தலைவர்தேர்ந்தெடுக்கப்படுவார் எனத் தெரிகிறது.

வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் நாளை காலை 10 மணிக்கு அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக்கூட்டம் நடைபெறுகிறது.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா செயற்குழுக் கூட்டத்திற்குத் தலைமை வகிக்கிறார். இக்கூட்டத்தில் புதிய அவைத் தலைவர்தேர்ந்தெடுக்கப்படுவார். அவரது தலைமையில் பின்னர் பொதுக்குழு கூடும்.

காளிமுத்து மறைவால் அவைத் தலைவர் பதவி காலியாக உள்ளது. புதிய அவைத் தலைவராக கே.ஆர்.ஜி. மணிமொழியன் தேர்வுசெய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் அமைச்சர் மதுசூதனும் போட்டியில் உள்ளார்.

சென்னை மாநகராட்சித் தேர்தல் வன்முறைக்குப் பொறுப்பேற்று முதல்வர் கருணாநிதி, அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ராஜினாமா செய்யவேண்டும், தேர்தல் ஆணையர், டிஜிபி, காவல்துறை ஆணையர் ஆகியோரை மாற்ற வேண்டும் என்று கோரி தீர்மானம் நிறைவேற்றப்படும் எனத்தெரிகிறது.

பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் கலந்து கொள்வதற்காக மாநிலம் முழுவதிலுமிருந்து அதிமுகவினர் சென்னைக்கு வந்தவண்ணம் உள்ளனர்.

ஜெயலலிதாவுக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க அதிமுகவினர் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் சிலவற்றையும் ஜெயலலிதா அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+